தென்னிலங்கைப் போராட்டங்கள் தேசத்தின் நலன் கருதியே இடம்பெறுகின்றனவா?
Share
கதிரோட்டம்- 15-07-2022
இலங்கையின் தென்பகுதியிலும் தலைநகராம் கொழும்பிலும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் என்ன நோக்கத்திற்காக நடைபெறுகின்றன என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கும் உள்ளதா என்பதைப் பற்றிய கேள்வியை எழுப்பு அதற்கான ஒரு கலந்துரையாடலை தொடர்வதே சிறந்த வழி என்பதை ஆராய்வது தொடர்பாக இவ்வார கதிரோட்டத்தை படைக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகின்றது
இலங்கையின் மக்கள் தொகையில் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளவர்களில் தொழிலாளர்கள் விவசாயிகள் நடுத்தர வர்க்கம சார்ந்தவர்கள் இருக்கையில் நாட்டில் ஆட்சி செய்யும் அதிகாரத்தை தங்கள் கைகளில் தொடர்ச்சியாக வைத்துக்கொள்ளும் சில குழுக்கள் அவற்றிக்கு கட்சிகள் என்ற பெயரிட்டுக் கொண்டு நடத்தும் நாடகங்களே. நாட்டில் இவ்வாறான ஒரு பொருளாதார வீழ்ச்சியை அல்லது பின்னடைவை திடீரென கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்துள்ளன என்பதை எண்ணும் பாதிக்கப்பட்டவர்கள் கொதித்தெழுவது நியாயமானதா என்பது பற்றி நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும்.
புரட்சி என்றால் ஏதேனும் ஒரு கொள்கையோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்ற காரணங்களை முன் நிறுத்தி கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர் என்ற விடங்களை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில் பொருளாதார சீரழிவிற்கு காரணமானவர்களின் அணிகள் செய்யத் தொடங்கியுள்ளன.
முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் சாதாரண மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது என்ற உண்மையை இலங்கையின் அண்மைக் கால சம்பவங்கள். மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கஸ்டங்கள் ஆகியன நிரூபுித்துள்ளன என்பது வெளியப்படையாகவே தெரிகின்றன.
இது வரை காலமும் அரசாங்கத்தையும் ஆட்சியில் உள்ளவர்களையும் மக்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு தங்களால் தெரிவு செய்யப்பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை செப்பனிட தவறிய அதே நேரத்தில் மக்களை சீரழிவிற்குள் தள்ளிவிட்டு தாங்கள் மாத்திரம் அரசின் வளங்களை பயன்படுத்தியும் சலுகைகளை கைவிட்டு விடாமலும் சுகபோகங்களை அனுபவிக்கும் உயர்ந்த நிலையில் உள்ளார்கள் என்பதை மக்கள் நிதர்சனமாகத் தெரிந்து கொண்டார்கள். இதனால் தோன்றிய ‘எழுச்சியே’ தற்போதைய போராட்டம் என்பதை இலங்கை மக்கள் தொகையில் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் அறிந்து கொண்டார்கள்.
அரசியல் பதவிகள் மூலம் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டு சுகபோகத்தையும் பலத்தையும் தொடரலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு ஒரு பலத்த அடியாகவே நாம் இந்த நாட்களைப் பார்க்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மாத்திரம் மக்களுக்கு சேவை செய்யாமல் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் அதேவேளையில் பொது மக்கள் பட்டினியால் வாடவும் தகுந்த தொழில் வாழும் இல்லங்கள் இல்லாமல் வாடவிடவும் காரணமாக உள்ளவர்களையும் அந்த அரசியல் முறைமை ஒன்றையும் தகர்க்க நினைப்பதில் என்ன தவறு உள்ளது என்பதை மக்கள் கேள்வியாக முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். இதுதான் தற்பொழுது இடம் பெற்ற ஒரு அதிரடியான மாற்றம் ஆகும். மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் நாட்களைக் கடத்தி மீண்டும் அதே ‘கும்பல்’ ஆட்சி பீடத்தில் அமர்ந்து ‘ குடும்பங்களாக கும்மாளம் போடும்’ ராஎண்ணத்துடன் இராஜபக்ச குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.
எனினும் ◌ராபச்சா குடும்பங்களை துரத்திவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்ற கருத்தையே இந்த போராட்ட அணியில் உள்ளவர்கள் முன்வைக்கின்றார்கள் என்ற தவறான கருத்தை சிலர் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் மக்கள் மத்தியில் போதித்திருக்கிறார்கள். தற்போது பதில் ஜனாதிபதியாக பதவியை தக்க வைத்துள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவரது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதையும் மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சியில் ஆபத்துக்கள் எதுவும் இல்லாமல் இருக்கவும் ரணில் உதவப்போகின்றார் என்பதை இனிவரும் நாட்கள் எமக்கு உணர்த்தப் போகின்றன.
ஆனால் இந்த நேரத்தில் வடக்குக் கிழக்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்த போராட்டங்கள் ஆரம்பமான ப பின்னர் இதய சுத்தியுடன் பல நகர்வுகளை கையாண்டிருக்கலாம்.
தமிழர் பிரதேசங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்றுகூடி அரசியல் பிரகடணம் ஒன்றைச் செய்திருக்கலாம். அதாவது ஒன்பதாம் திகதியோடு இலங்கை அரசியல் யாப்பின் நியாயத்தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதை எமது மக்களுக்கு தெவித்து அதை மக்கள் சிந்தனைகளுக்கு விட்டிருக்கலாம்
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இடைக்கால அரசாங்கத்தின் கீழ் நாட்டை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உண்மையான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை தற்போதைய நாடாளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும், புதிய ஆணைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு குழுவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இன்னமும் கொண்டுள்ளது. இந்த நாடாளுமன்றத்தை அமைப்பது நாட்டை ஸ்திரப்படுத்தவும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உதவாது. குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கம் அமைத்து நாட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும். சகஜநிலைக்கு பின்னர் தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவரது கூற்யையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தற்போது ஜனாதிபதி பதவியை ‘சுவைக்கத் தொடங்கியுள்ள’ இந்த ரணில் பதவியை விட்டு ஓடிச் செல்ல பின்னர் ஜனாதிபதியாகம் பிரதமராகவும் வரப்போகின்றவர்களும் ராஜபக்சாக்களின் வழி வந்தவர்களாகவே இருந்து நாட்டை நாசம் செய்வார்கள் என்பதே உண்மை.