கனடாவின் முக்கிய விமான நிலையமான ரொறன்ரோ- பியர்சன், விமானப் பயணம் சார்ந்த சவால்கள் பலவற்றை எதிர்கொள்ளும் இடமாக மாறியுள்ளதா?
Share
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் அதன் பாதிப்பும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சற்று தணிந்த நிலையி;ல பயணங்களை விரும்பும் அல்லது பயணத் தேவைகள் உள்ள மக்கள் மீண்டும் ஆர்வத்துடன் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தொடர்ந்து பல சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறுவதை எமக்கு கிடைக்கு செய்திகள் நன்கு தெளிவூட்டி வருகின்றன – ஆனால் சில விமான நிலையங்களை மற்ற விமான நிலையங்களை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளனவா என்ற கேள்வியும் அவற்றில் ஒன்று கனடாவின் ரொறன்ரோ பியர்சன் மற்றும் மொன்றியால் விமான நிலையம் ஆகியனவும் அடங்கியுள்ளன என்ற தகவல்களை கனடாவின் தேசிய ஊடகங்கள் பட்டியலிட்டுள்ளன என்று அறியப்படுகின்றது
இந்த வகையில் கடந்த ஜூலை தொடக்கத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள், ரொறன்ரொ பியர்சன் சர்வதேச விமான நிலையம் – கனடாவில் மிகவும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது என்றும் உலகெங்கிலும் உள்ள 155 நகரங்களுக்கு இங்கிருந்த விமானங்கள் பறக்கத் தொடங்க. உலகளவில் எந்த விமான நிலையத்திலும் இல்லாத தாமதங்களை ரொறன்ரொ விமான நிலைய நிர்வாகமும் அதன் தலைமை அதிகாரிகளும் எதிர்கொள்ள வேண்யிருந்ததாக அறியப்படுகின்றது.
இந்நிலையில். கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏயர் கனடா விமானங்களின் மூலம் ரொறன்ரோவிலிருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாக அல்லது ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்து வருகின்றன என உலக விமான கண்காணிப்பு இணையதளம் தெரிவித்துள்ளது.
இதற்கு நல்ல உதாரணமாக ஒரு சம்பவத்தை தேசிய ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. தற்போது வட அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருக்கும் கனடாவின் நாட்டுப்புற இசைப் பாடகர் பிரட் கிஸ்ஸல், கடந்த ஜூன் மாத இறுதியில் இத்தாலியில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனது இசைக்குழு உறுப்பினர்களுடன் ரொறன்ரோ விமான நிலையத்திற்கு வந்திருந்தாராம்
அவர்களது அடுத்த பெரிய இசை நிகழ்ச்சி பல நாட்கள் கழித்து கல்கரி நகரில் நடக்க இருந்தது.. அவர்களுக்கு நிறைய நேரம் இருந்த நிலையில் அவர்கள். ரொறன்ரோ விமான நிலையத்தை வந்தடைந்தனராம்
“அங்கு மூவாயிரம், ஐயாயிரம் பேர் இருந்திருக்காங்க. “ஆமாம், அது பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது. ஆனால் அந்த அளவு கூட்டம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும், நான் மேடையில் இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.”
ஏறக்குறைய மோசமாக, விமான நிறுவனங்கள் தங்கள் சாமான்களை இழந்தன, இசைக்குழுவிற்கு சொந்தமான கிட்டார் உட்பட. இசைக் கருவிகள் பல அவர்கள் பயணித்த விமானம் ஊடாக கனடாவிற்கு எடுத்து வரப்படவில்லையாம் அனால் அவர்கள் பயணம் செய்த விமான நிலையத்தின் பயணப் பொதிகள் உரிமை கோராமல் உள்ள பகுதியில் 1,500 முதல் 2,000 பயணப் பொதிகள். மலை மேடுகள் போன்று குவிந்து கிடந்ததாகவும் அவற்றில் தங்கள் இசைக் கருவிகள் அகப்பட்டுக்கொண்டதாகவும்” நாட்டுப்புற இசைப் பாடகர் பிரட் கிஸ்ஸல் செய்தியாளர்களிடம் கூறினாராம்
நீண்ட வரிசைகள் மற்றும் தொலைந்து போன இசைக்கருவிகள் என பலவற்றால் ஏற்பட்ட விரக்தியில், அவர் நஸ்டங்களை அனுபவித்ததாகவும் மற்றும் அவரது இசைக்குழு உறுப்பினர்களும் உளத் தாக்கத்திற்கு உட்பட்டதாகவும் அறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்பொன்றே, கனடிய விளையாட்டு நிகழ்ச்சிகள் தொடர்பான அறிவிப்பாளரும் முன்னாள் தகுதிவாய்ந்த ஐஸ் ஹாக்கி வீரருமான ரியான் விட்னி, ஜூலை 6 ம் திகதி அன்று தனது ரொறன்ரோத்திற்காக மேற்கொண்ட பயண அனுபவத்தைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டார், அவரது ரத்து செய்யப்பட்ட விமானத்திற்குப் பிறகு பாஸ்டனுக்குச் செல்வதற்காகத் துடித்துக் கொண்டிருந்தார், அச்சமயத்தில் ரொறன்ரோ விமான நிலையமான தனக்கு “பூமியின் மிக மோசமான இடம்” போன்று தோன்றியதாகவும் அதனை உலகெங்கும் உள்ள தனது நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் அவரும் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது குரலை தனது பதிவில் காட்டியபோது மிகவும் பதட்டமாகவும் கோபமாகவும், இருந்ததாகவும் அவரது அந்த முகநூல் பதிவுகள் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டதாகவும் ஊடகவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவர் அப்போது கூறினாராம் வீடியோவில் : “நான் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும், இந்த விமான நிலையத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.” என்று உரத்துச் சத்தமிட்டதாகவும் அறியப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் கடந்த மே மாதத்தில், கனடாவின் பெரிய விமான நிலையங்களில் பணியாளர்களை அதிகரிப்பது எனவும் , விமான நிலையங்களில் பயணக் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கனடாவின் விமான சேவைகள் அதிகார சபை உடனடியாக ஊடகங்கள் மூலம் அறிவித்திருந்தாலும். அந்த அறிவிப்பு யாதார்த்தமாக நிகழ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் செய்தியாளர் ஒருவர் கனடா பல்லின ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்த யூஐல மாதத்தில் கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பில் உள்ள கிரேட்டர் டொராண்டோ விமான நிலையங்கள் ஆணையம், “பயணிகள் மற்றும் பங்குதாரர்கள்” எவ்வாறு தாமதங்களைக் குறைக்க ஒன்றிணைந்து செயல்படலாம் என்பதற்கான கல்வி பிரச்சாரத்தை ஆரம்பித்து நடத்தியபோதும் , மேலும் “பல்வேறு புதிய சிக்கலான” சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் தற்போது அந்த விமான நிலையங்களின் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த தொடர் பிரச்சனைகளான நீண்ட விமான தாமதங்கள், நீண்ட வரிசைகள், இரத்து செய்யப்பட்ட விமானங்கள் சேவைகள் மற்றும் தொலைந்து போகும் பயணப் பொதிகள்( லக்கேஜ்) ஆகியவை கனடா ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தீர்க்கப்படக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை என பிரயாணிகள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பிரச்சனைகள் கனடாவில் மாத்திரமல்ல உலகின் பல பெரிய நகரங்களிலும் இடம்டபெறுவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். தினமும் சுமார் 100,000 க்கும் மேற்பட்ட பயணிகள் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தை விட்டு விமானங்களில் பயணிக்கின்றார்கள் என்றும் , இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையம் என்ற நிலையிலும் அங்கும் , இவ்வாறான பிரச்சனைகள் தினமும் தொடர்வதாகவும் அங்கிருந்து பயணிக்கும் வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடா அமெரிக்கா மற்றுமு; இங்கிலாந்து ஆகிய நாடுகளில். விமான சேவையை இரத்து செய்வது என்பது மிகவும் பொதுவானதாகிவிட்டது என்றும் மேலும் பயணப் பொதிகள் (லக்கேஜ்கள்) காணாமல் போகின்றன என்ற முறைப்பாடுகளும் அதிகரிப்பதாகவும் செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்..
இந்த கோடையில் கனடாவின் பியர்சன் விமான நிலையத்தின் மதிப்பீடு சரிந்தது, நியூ ஜெர்சியின் நெவார்க்கில் உள்ள லிபர்ட்டி சர்வதேச விமான நிலையம், நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையம் மற்றும் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல விமான நிலையங்களுக்கான மதிப்பீடுகளைப் போலவே தொடர்வதாகவும் இந்த நிலை நீடித்தால் உலகப் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்றும் அறியப்படுகின்றது.
இந்த பிரச்சனைகள் தொடர்பாக மிகவும் விரக்தியுடன் பதிலளித்த கனடாவின் எயர் கனடா விமான சேவை நிறுவனத்தின் தலைவர் மைக்கல் அவர்கள் தேசிய ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்த கருத்துப் பகிர்வின் போது, “உலகளவில் எங்கள் விமான சேவை தொழில்துறையில் விஷயங்கள் வழக்கம் போல் இல்லை, இது எங்கள் செயல்பாடுகளையும் பாதிக்கிறது” என்று கூறினார்.