LOADING

Type to search

கதிரோட்டடம்

‘அரகலய’ போராட்டத்திற்கு பயங்கரவாத ‘முத்திரை’ குத்தப்பட்;டதற்கு எதிராக யார் போராடுவது?

Share

கதிரோட்டம் 26-08-2022

இலங்கையில் தமிழ் இளைஞர் ஆயுதங்களை ஏந்தி போராடத் தொடங்கியபோது ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை’ கொண்டுவந்த அன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த அரசாங்கம் தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திவிட்டார்கள் என்று பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.
சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக தமிழ்ப் போராளிகள் ஆயுதங்களை ஏந்தவில்லை என்;பதை ஆளும் வர்க்கத்தினர் அறிந்திருந்தாலும். அவ்வாறான பிரச்சாரம் தான் தங்கள் ஆட்சியின் இருப்பைக் காப்பாற்ற உதவும் என்பதை அறிந்திருந்தார்கள்.

காலத்திற்கு காலம் ஆட்சியில் மாறி மாறி அமர்ந்திருக்கும் ஆளும் வர்த்தகத்தின் பிரதிநிதிகள் கட்சிகள் என்ற பெயரோடு பிரிந்து நிற்கின்றார்களே தவிர அவர்களுக்கிடையில் சமரசங்கள் அடிக்கடி நிகழும் என்பதை அண்மைக்கால இலங்கை அரசியல் மாற்றங்கள் எமக்கு காட்டி நிற்கின்றன.

தங்கள் கைகளில் எவ்விதமான ஆயுதங்களையும் ஏந்தாமல் தொடர்ச்சியாகப் போராடி நாட்டின் பொருளாதாரத்தை கொள்ளையடித்த கோத்தாபாயவை நாட்டைவிட்டு ஓடச் செய்த ‘அரகலய’ என்னும் போராட்டக் குழுவிற்கு ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்திய அரசாங்கத்தை கண்டிக்காமல் இருக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ‘ஆளும் வர்க்கத்தின்’ பிரதிநிதிகள் என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஏன் சாதாரண குடும்பங்களில் பிறந்து தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக உறுப்பினர்களாக பதவி வகித்த வண்ணம் அதிகார பலத்தையும் பண பலத்தையும் தமதாக்கிக் கொண்டுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன். சம்பந்தன் மற்றும் ஸ்ரீதரன் சிவஞானம் உட்பட அனைவரும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்பதை நாம் இதுவரை அறிந்திருக்காவிட்டால். எமது அரசியல் பார்வையில் தவறு உள்ளது என்பதே அர்த்தம்;

தங்கள் ஆட்சியின் இருப்பை தங்கள் கைகளிலிருந்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற எந்த ஆளப்படுகின்ற சக்திகளின் கைகளுக்கு சென்று விடக் கூடாது என்று எவ்வாறு ரணில். மகிந்தா, மைத்திரிபால சிறிசேனா போன்றவர்கள் விரும்புகின்றார்களோ அவ்வாறே நாம் முன்னர் பெயர் குறிப்பிட்ட தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விரும்புவார்கள் என்பதே உண்மை.
இவ்வார எமது பதிப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதியுள்ள கட்டுரையில் ‘அரகலய” போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கல்வி அறிவு உள்ள இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அனுதாபத்தோடு பாரக்கின்றார்.;

யங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாய தொடங்கி விட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன். அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதை நிலாந்தன் அடிக்கோடிட்டு காட்டுகின்றார். ஆனால். பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட எமது இனத்தின் அரசியல்வாதிகளோ, தங்கள் இருப்பும் பதவிகளும் பறிபோய்விடும் என்பதற்காக சலுகைளைப் பெற்றுக்கொண்டு மௌனமாகிவிட்டார்கள்.

அப்படியானால் ரணில் என்னும் கொடுங்கோலனின் கொட்டத்தை அடக்குவதற்கு யார் இனிமேல் போராடப் போகின்றார்கள் என்பதே எமது இவ்வாரத்தின் கேள்வியாக குறிப்பிடுகின்றோம்