அச்சு ஊடகத்தை முன்னெடுத்த பெருநிலக்கிழார் ஆறுமுகம் பிள்ளையின் குடும்ப மணவிழா
Share
தமிழகம் திருப்பத்தூரில் பத்திரிகையாளர் மலையாண்டி
-நக்கீரன்
கோலாலம்பூர், செ.09:
மருத்துவ மணமக்களான டாக்டர் தனசேகரன்-டாக்டர் ஜஸ்வர்யா ஆகியோரின் திருமணம் தமிழ்நாடு, திருப்பத்தூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மலேசியத் தமிழ் நாளேடான மக்கள் ஓசையின் புகைப்பட கலைஞரும் மலேசியத் தமிழ் சமூகத்தில் கடந்த நூற்றாண்டில் பல்வகையாலும் செல்வாக்குடன் வாழ்ந்த பெருநிலக்கிழாரும் பத்திரிகை முதலாளியுமான ஆறுமுகம் பிள்ளை, ‘வள்ளல்’ என்னும் அடைமொழியுடன் அழைக்கப்படும் ஒரேத் தமிழரான வள்ளல் ரெங்கசாமி பிள்ளை ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டவருமான பி.மலையாண்டி இந்த மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளனத்தின் பினாங்கு மாநில முன்னாள் தலைவர் வசந்தகுமாரும் இதில் கலந்து கொண்டார்.
இற்றை நாளில் சமூக ஊடகத்தின் பங்கு பேரளவில் இருந்தாலும் அண்மைக் காலம்வரை அச்சு ஊடகம் ஒன்றுதான் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமான ஊடகமாக இருந்தது.
அந்த வகையில் தமிழ் மலர், தின மணி ஆகிய நாளிதழ்களையும் சம நீதி என்ற வார இதழையும் நடத்தி வந்த அறுமுகம் பிள்ளை, மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு, அன்றைய நாட்களில் பெரிதானது.
அத்தகைய அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளையின் கொள்ளுப் பேரன்தான் இந்தவிழாவின் நாயகன்.