LOADING

Type to search

கதிரோட்டடம்

அதிசய மனிதர் ஈழவேந்தன் ஐயா. அகவை தொன்னூரை அடைகின்றார்

Share

கதிரோட்டம்  09-09-2022

பல்துறை ஆற்றலும் நல் ஆங்கிலப் புலமையும் அரசியல் ஞானமும் அழகிய சிரிப்பும் அடங்கா போர்க்குணமும் அமைதியின் இருப்பிடமுமாகிய கனடாவாழ் ஈழவேந்தன் ஐயா இன்று வெள்ளிக்கிழமை கனடா வாழ் தமிழ் அன்பர்களால் விழா எடுக்கப்பெற்று கொண்டாடப்பட உள்ளார்.

இந்தச் செய்தி எம் காதுகளில் வந்தொலித்த போது ‘நல்ல விடயம் தான்’ என்று சொல்லி எம் நாக்கு நடனமாடுகின்ற வேளையில். மனதும் உற்சாகத்தோடு அமைதியாக சம்மதம் தெரிவிக்கின்றது

எத்தனையோ நகரங்களிலும் கிராமங்களிலும் தனது கடந்த கால வாழ்க்கையின் பதிவுகளை கொண்டிருந்த ஈழவேந்தன் ஐயா அவர்கள் தற்போது கனடா என்னும் புண்ணிய தன் வாழ்வை மேற்கொண்டு வருகின்றார். இங்கு அவரோடு கூடிவாழும் சந்தர்ப்பம் பெற்ற நாம் அதிஸ்டசாலிகள் என்றே கருதவேண்டும்.

ஒரு பக்கம் ஒரு வகையான போர்க் குணம். மறு பக்கம் பொறுமையின் சிகரமாக உயர்ந்தவராய் அவர் என்றும் மிளிரும் மாமனிதர். ஈழுவேந்தன் ஐயா அவர்களது பிறப்பு தொடக்கம் இன்று வரை பல அங்கீகாரங்களைப் இவருக்குப் பெற்றுக் கொடுத்து வந்தாலும். ஐயா அவர்களது கடந்த கால வாழ்க்கை அர்ப்பணிப்புக்கள் அடங்கிய ஒன்hறகவே அமைந்துள்ளது என்பதை எம்மில் பலர் அறிந்து வைத்துள்ளோம்.

இலங்கையின் மத்திய வங்கியில் பதவி வகித்திருந்தாலும் அவரது இருப்பு என்பது எப்போதும் ஒரே தன்மை கொண்டதாகவே உஎள்தை நாம் கவனிக்க முடிகின்றது. தான் இயல்பாகவே கொண்டிருந்த இனப் பற்று மற்றும் மொழிப்பற்று தொடர்பாக அவர் கொண்டிருந்த தீவி;ரம் என்பது கணக்கில் அடங்கிவிடமாட்டாது.

அகவை 90 ஐ அடையும் ஈழவேந்தன் ஐயா அவர்கள் அரசியலில் ஆர்வம் கொண்டும் அதில் ஈடுபாட்டைக் காட்டியும் நின்ற காலத்தில் ‘அதிசய மனிதர’; என்ற நாமத்தை தனதாக்கிக் கொண்டார். இதனால் இவர் அரசியல் களத்தில் கால் பதிக்க முயன்று அதில் வெற்றி கண்டார். ஆனால் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒரு முக்கியமாக உறுப்பினர்களாக இருந்து தமிழ் மக்களுக்காக உழைக்க விரும்பிய அவர். ஏனைய உறுப்பினர்களோ அன்றி நண்பர்களோ அவ்வாறாக இருக்கவில்லை என்பதை நன்கு அறிந்திருந்தாலும் அவரிடத்தில் குடிகொண்டிருந்த அனைத்து திறன்கiளையும் வளர்த்து;க் கொண்டார்.

தான் பிறந்த நாட்டில் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக செயற்படுவதற்கு அவர் முயன்றாலும், அவர் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் பதவி வகித்தவர்கள் ‘விலை’ போகின்றவர்களாக மாறிய காரணத்தால், ‘உண்மையான’ மக்கள் சேவகனாக பணியாற்றிய ஈழவேந்தன் ஐயா அவர்கள் பழிவாங்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து. தான் நேசித்த தமிழையும் தமிழ்த் தேசத்தையும் தழுவியபடி மக்களுக்காக குரல் கொடுப்போம் என்று எண்ணத்தில் தமிழ்நாட்டுக்குச் சென்றாலும் அங்கும் அவரால் நிம்மதியாக வாழ முடியவில்லை.

தொடர்ந்து கனடாவில் குடியேறி இங்கிருந்த வண்ணம் தாயக மக்களுக்காக உழைப்போம் என்ற உயரிய எண்ணத்தோடு இங்கு கால்பதித்த அவருக்கு. இங்கும் இடையூறுகளே தொடர்ந்து வந்தன.
ஆனாலும், இன்று 16ம் திகதி வெள்ளிக்கிழமை கனடாவில் அவரை நேசிக்கும் அன்பர்களால் எடுக்கப்பெறுகின்ற விழாவில் அவர் பெறும் கௌரவம் அவரது நேர்மையான வாழ்வுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாக விளங்கும் என்பதே எமது எண்ணமாகும்.