ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்களின் சஷ்டியப்த பூர்த்தி மங்கள நிகழ்வு
Share
கனடாவில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்ப் பணியும் சைவப் பணியும் ஆற்றியவண்ணம் எம்மவர் மத்தியில் மொழியையும் சமயத்தையும் ஆன்மீகத்தோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் எம்மவர்களை தூண்டும் ஒரு சக்தியாக விளங்கி வருபவர் ஸ்காபுறோ ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள் அவர்கள் அன்னாரது 60வது அகவை பூர்த்தி விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பெற்ற சஷ்டியப்த பூர்த்தி மங்கள வைபவ நிகழ்வு தொடர்பாக சிவாச்சாரியப் பெருமக்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்பெறும் விசேட நெறிகள் அடங்கிய கிரியைகள் மற்றும் சடங்குகள் அடங்கிய பெருவிழா 27-09-2022 திங்கட்கிழமையன்று காலை 10.00 தொடக்கம் கனடா கந்தசாமி கோவில் கலாச்சார மண்டபத்திலும் ஆலயத்தின் பிரதான வழிபாட்டு தலத்திலும் சிறப்புற நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான சிவாச்சாரியப் பெருமக்கள் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் அழைக்கப்பெற்ற வர்த்தகப் பெருமக்கள் மற்றும் ஊடகவியலாளர் குடும்பத்தினர் கலைஞர்கள் உறவினர்கள் ஐந்நூறுக்கும் அதிகமான சபையினர் கலந்து கொண்டனர்.
மொத்தத்தில் ஒரு சமூகத் தொண்டனாகவும் வழிகாட்டியாகவும். மனித நேயம் கொண்டவராகவும் விளங்கும் சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள் அவர்கள் மற்றும் துணைவியார் ஜெயந்தி அம்மா ஆகியோர் மணக்கோலத்தில் மீண்டும் தோன்றிய காட்சிகள் கண்கொள்ளாத பெருமிதமாகத் தோன்றியது.