LOADING

Type to search

கனடா அரசியல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் வே. சங்கரநாராயணன் எழுதிய ‘பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்’ வெளியீட்டு விழா 21ம் திகதி வெள்ளிக்கிழமை கனடாவில் நடைபெறுகின்றது

Share

எதிர்வரும் 21-10-2022 சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் கனடா தொடர்பான பயண நூல் ஒன்று வெளியிடப்படவுள்ளது.

‘பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்’ நூலை எழுதிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலம் வாழ் பேராசிரியர் வே. சங்கரநாராயணன் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா தொடர்பான அழைப்பிதழை இன்று மூன்று நண்பர்களிடம் சேலம் வாழ் பேராசிரியர் வே. சங்கரநாராயணன் அவர்கள் நேரடியாக கையளித்தார்.

இடமிருந்து வலமாக ‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன். கணக்காளர் குமார் தம்பியப்பா மற்றும் காப்புறுதி முகவரும் வீடு விற்பனை முகவருமான கென் கிருபா ஆகியோர் பெற்றுக்கொள்வதைக் காணலாம்.

மேலும் எதிர்வரும் 15ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கனடா உதயன் சர்வதேச விருது விழாவில் பேராசிரியர் வே. சங்கரநாராயணன் அவர்களுக்கு ‘உதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது- தமிழ்நாடு-2022 வழங்கப்படவுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது