LOADING

Type to search

அரசியல்

தொடரும் நெருக்கடி: மாற்றுத்திறனாளிகள் உட்பட 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்

Share

எமது யாழ் செய்தியாளர்.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே உள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு இரு மாற்றுத்திறனாளிகளான கணவன் மற்றும் மனைவி உட்பட நால்வர் சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் வாழ வழியில்லாமல் தவித்து வரும் அப்பாவி மக்கள் அபயம் தேடி இந்தியாவிற்கு (ராமேஸ்வரத்திற்கு) அகதிகளாக செல்வது தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் இலங்கை திருகோணமலை திருக்கடலூர் எண்- 514, கோவிந்தன் வீதியைச்சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜெ.ஜனார்த்தன் (29), மாற்றுத்திறனாளியான. அவரது மனைவி பிரவீனா (26), மகன்கள் சுதர்சன் (09), சுதிசன் (05) ஆகியோர் மன்னாரில் இருந்து புறப்பட்டு படகு கட்டணமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஞாயிறு(23) இரவு 8 மணிக்கு பிளாஸ்டிக்படகு மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரையில் இறக்கிவிட்டு படகு திரும்பிச் சென்றுள்ளது.

கடலோர பாதுகாப்பு குழுமப் போலீசார் இவர்களை மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைசெய்து மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.