LOADING

Type to search

கனடா அரசியல்

Autobiography of Dr. Velupillai Elagupillai, a Scientist in Canada

Share

கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அணு விஞ்ஞானி கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளையின் சுயசரித நூல்

வட இலங்கையில் ஆவரங்கால் கிராமத்தில் பிறந்தவரும் அங்கு கல்வி; கற்று பின்னர் கனடாவில் புலமைப் பரிசு திட்டத்தில் உயர் கல்வியைப் பெற வந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அணு விஞ்ஞானியுமான கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை அவர்களின் சுயசரித நூல் கனடாவில் வெளியிடப்பெறவுள்ளது என்ற நற்செய்தியை இந்த முகநூல்ப் பக்கத்தில் பதிவிடுவதில் அனைவருக்கும் பெருமையே பேராசிரியர் இலகுப்பிள்ளை என்னும் ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றை படித்து அவர் எவ்வாறு அவர் கல்வியிலும் கண்டு பிடிப்புக்களிலும் சாதனை புரியும் அளவிற்கு வளர்ந்தார் என்பதை அறிந்து கொள்ள விரும்புவர்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த நூல் பிரதிகள் கனடா வந்தடைவதற்கு இன்னும் சில வாரங்கள் உள்ளதால் நூலின் வெளியீட்டு விழாக்குழுவினர் அதன் திகதியை தீர்மானிக்க இயலாமல் உள்ளது.
எனினும் இந்த நூலின் பிரதியொன்று எமது கைகளுக்கு கிட்டியுள்ளதால் அதனை மேலோட்ட வாசிக்கும் அற்புதமான வாய்ப்பு எமக்குக் கிட்டியது

தான் பிறந்த விவசாயக் கிராமத்தில் அப்போதிருந்த வாழ்க்கை முறை மற்றும் சவால்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் பதிவு செய்துள்ள பேராசிரியர் விவசாய மண்ணில் தான் தந்தைக்கு உதவியாகச் சென்று பணி செய்வது. எருது மாடுகளை குளிப்பாட்டுவது வெங்காயம் நடுவது. ஆலயங்களுக்கு மாட்டு வண்டிகளில் பயணிப்பது போன்ற அனுபவங்கள் எம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

நூலின் 8ம் பக்கத்தில் பேராசிரியர் எழுதியுள்ள ஒரு அத்தியாயத்தின் தலைப்பைப் பார்த்ததும் அவர் மீதுள்ள மரியாதை இன்னும் அதிகரித்தது.

‘எனது தாயின் உலகம்’ என்ற அந்த அத்தியாயத்தை நாம் ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தோம்.
வறுமையின் காரணமாக தாம் அனுபவித்த துன்பங்களிலிருந்து தற்காலிகமாக விடுதலை பெற தனது தாயார் என்னென்ன ‘காரியங்களை’ செய்தார் என்பதை அவர் விபரிக்கும் போது எம் இதயம் கனத்தது.

தனது சிறுவயதில் இவ்வாறான துன்பங்களை அனுபவித்தவர் பின்னாளில் கனடாவிலும் வேறு உலக நாடுகளிலும் உயர்ந்த பதவிகளை வகித்து அந்த கிராமத்து மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை வியப்புடன் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருந்தது

280 க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இந்த அற்புதமான அனுபவப் பதிவின் அட்டைப் படத்தை இங்கே காண்கின்றவர்கள் பலர் இந்த நூலின் வெளியீட்டு விழாவிற்காக காத்திிருப்பார்கள் என்பதை எம்மால் உறுதி செய்ய முடிகிறது.

தனது திறமையின் காரணமாகவும் முயற்சிகளின் முத்தாய்ப்பாகவும் முன்னேறிய பேராசிரியர் இலகுப்பிள்ளை அவர்களின் உயர்வு எல்லைகளைக் கடந்த ஒன்றாகும். கனடாவின் பிரதமராக இருந்த போல் மார்ட்டின் அவர்கள் பேராசிரியரை அழைத்து ‘கனடிய அணுசக்தி ஆணையயத்தின்’ தலைவராக நியமித்த நாளை நாம் சற்று நின்று நிதானித்து நினைத்துப் பார்க்க வேண்டும்.

நூலின் அத்தனைப் பக்கங்களும் அற்புதங்களும் அடக்கமும் கொண்டவையாக நகர்ந்து சென்று நாம் அதன் இறுதிப் பக்கத்தை அடைகின்றோம்..

எனினும் வெளியீட்டு விழாவிற்காக இன்னும் சில நாட்கள் நாம் காத்திருப்போம்… அவரை வாழ்த்த விரும்புவோர் 416 999 2282 என்னும் இலக்கத்தை அழைக்கலாம்.

நன்றி

ஆர். என். லோகேந்திரலிங்கம்