கனடிய அரசு வழங்கவுள்ள புதிய பல் மருத்துவ கொடுப்பனவு பற்றி அறிந்து கொள்ளுங்கள்
Share
நீங்கள் உடனடியாக விண்ணப்பித்து அதன் பலனை அனுபவியுங்கள்!
ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற விபரங்கள்
அன்புடையீர்,
கனடாவிலும், உலகெங்கிலும், சிறுவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும், ஆனால் தடுக்கப்படக்கூடிய, நீண்டகால நோய் பற்சிதைவு என்பது உங்களுக்குத் தெரியுமா? 2010 ஆம் ஆண்டில், கனடாவில் 6 முதல் 11 வயது வரையான சிறுவர்களில் 57 சதவீதமானோருக்கு ஏற்கனவே பற்சூத்தை ஏற்பட்டிருந்ததெனத் தெரிவிக்கப்பட்டது. வாய் நோய்கள் இளம்பராயத்திலேயே, முக்கியமாக பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பே அடிக்கடி ஏற்படுவதால், வாய் நலனைப் பேணும் நல்ல பழக்கவழக்கங்களை இயலுமான அளவு முற்கூட்டியே உருவாக்குவது முக்கியமானது.
இதற்காகவே, செலவினங்களைச் சமாளிக்க உதவும் எமது கனடிய அரசின் திட்டத்தின் ஒரு அங்கமாகக் குடும்பங்கள் பல் மருத்துவ செலவைச் சமாளிக்க உதவும் வகையில் எமது அரசு தற்காலிக பல் மருத்துவ கொடுப்பனவு ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், குடும்பங்கள் அவர்களது சிறு பிள்ளைகளுக்கு அடிப்படைப் பற்சிகிச்சையை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தனியார் பல் மருத்துவ காப்புறுதி இல்லாத, மற்றும் 90,000 டொலரிலும் குறைந்த சரிசெய்த நிகர குடும்ப வருமானம் (Adjusted Net Income) கொண்ட, மற்றும் 12 வயதிலும் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு கனடிய அரசின் பல் மருத்துவ கொடுப்பனவு தற்போது கிடைகக வாய்ப்பு இருக்கிறது.
இந்தத் திட்டத்தில், பல் மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கென ஒரு பிள்ளைக்கு 1,300 டொலர் வரையான பணம் (வருடமொன்றுக்கு 650 டொலர் வரை, இரண்டு வருடங்களுக்கு), நேரடியாகவும், முற்கூட்டியேயும் பின்வரும் அடிப்படையில் வழங்கப்படும்:
சரிசெய்த நிகர குடும்ப வருமானம் 70,000 டொலரிலும் குறைவாக இருந்தால், தகுதியுள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் வருடமொன்றுக்கு 650 டொலர் வழங்கபபடும்.
சரிசெய்த நிகர குடும்ப வருமானம் 70,000 டொலரிற்கும ; 79,999 டொலரிற்கும ; இடைப்பட்டதாக இருந்தால், தகுதியுள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும், வருடமொன்றுக்கு 390 டொலர் வழங்கப்படும்.
சரிசெய்த நிகர குடும்ப வருமானம் 80,000 டொலரிற்கும ; 89,999 டொலரிற்கும் இடைப்பட்டதாக இருந்தால், தகுதியுள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும், வருடமொன்றுக்கு 260 டொலர் வழங்கப்படும்.
தேசிய பல் மருத்துவத் திட்டம் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கை தொடரும் வேளையில், இந்தக் கொடுப்பனவு 2024 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும். கனடா வருமான வரி முகாமை, அத்தியாவசிய கொடுப்பனவுகளைக் கனேடியர்களுக்கு வழங்கிய அனுபவத்தையும், எது சிறந்த நடைமுறையென்ற பட்டறிவையும் பயன்படுத்திக் கனேடிய அரசின் சார்பாக இந்தக் கொடுப்பனவை வழங்கும் பணியைச் செய்கிறது. ஒக்ரோபர் 1, 2022 ,ற்கும் ஜுன் 30, 2023 , ற்கும் இடைப்பட்ட காலத்தில் தகுதியுள்ள பிள்ளைகள் பெற்ற அல்லது பெறவுள பற் சிகிச்சைக்காக நீங்கள் இப்போது இந்தக் கொடுப்பனவைப் பெற விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ள குடும்பங்கள் விரைவாகவும், இலகுவாகவும், பாதுகாப்பாகவும் கனடா வருமான வரி முகாமையின் My Account இல் (ESDC யின் My Service Canada Account ஊடாகவும் இந்தக் கணக்கை நீங்கள் அடையலாம்) விண்ணப்பிக்கலாம், அல்லது இதற்கென்ற தனியான 1-800-715-8836 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து விண்ணப்பிக்கலாம். நீங்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, நேரடி வைப்பு முறையைத் தெரிவு செய்தால், உங்களுக்கான கொடுப்பனவு ஐந்து வேலை நாட்களுக்குள் கிடைக்கும். கனடா பல் மருத்துவ கொடுப்பனவைப் பெறுவதற்கு நீங்கள் 2021 ஆம் ஆண்டுக்கான உங்களது வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள். உங்களுக்கான கொடுப்பனவு விரைவில் கிடைப்பதை உறுதி செய்வதற்கு உங்களது முகவரி, திருமண நிலை, நேரடி வைப்பு தொடர்பான தகவல்கள், பிள்ளைகளின் விபரங்கள் அனைத்தும் கனடா வருமான வரி முகாமையின் My Account இல் சரியாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
இந்தக் கொடுப்பனவு கனடாவில் ஐந்து லட்சத்துக்கும் ; அதிகமான பிள்ளைகளுக்கு உதவியாக இருக்குமெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. எனவே உங்களது அன்புக்குரியவர்கள் இதற்குத் தகுதி பெற்றுள்ளார்களாவெனக் கண்டறிந்து, ஆம் என்றால் நீங்கள் உடனடியாக விண்ணப்பித்து அதன் பலனை அனுபவியுங்கள்!