LOADING

Type to search

கதிரோட்டடம்

இலங்கையில் மனித உரிமை தினம் வருடா வருடம் கொண்டாடப்படும் நிலையில். அரச தரப்பால் இழைக்கப்படுகின்ற கொடுமைகளும் தொடர்கின்றனவே?

Share

கதிரோட்டம்- 16-12-2022

இலங்கையில் மனித உரிமை தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டும் அது தொடர்பாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கலந்துரையாடப்பட்டாலும் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் என எந்த இனவேறுபாடுகள் இன்றி அரச இயந்திரத்தாலும் அதைப் பாதுகாக்கின்ற பாதுகாப்பு படையினராலும் இழைக்கப்படுகின்ற கொடுமைகளும் கொலைகளும் இன அழிப்புக்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன என்பதை பல உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

சில நாட்களுக்குப் பின்னர் கொண்டாடப்பெற்ற சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் எழுபத்தி நான்காவது ஆண்டு நிறைவு – கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி அன்று கொண்டாடப்பட்டுள்ளது. பெரிதாக விளம்பரங்கள் செய்யப்படாமல் நான்கு சுவர்களுக்குள் இந்த கொண்டாட்டம் இடம்பெற்றிருக்கலாம். மனித உரிமை பிரகடனத்தை மதிக்காக இலங்கை அரசு எத்தனையோ ஆண்டுகளாக சிறைகளுக்குள் அடைத்து வைத்துள்ள தமிழ்; அரசியல் கைதிகளும் இருட்டாகவே உள்ள நான்கு சுவர்களுக்குள் தான் தங்கள் வாழ்வைக் கழித்து வருகின்றார்கள். அவர்களால் எதையுமே கொண்டாட முடியாமல் உள்ளது. இந்த கவலைகளோடு அவர்களின் வாழ்க்கை முடிந்து விடுமா என்ற கேள்விகள் எழுகின்றபோது அவர்கள் மனங்கள் அனுபவிக்கும் வேதனை அளவிற்குள்ள அடங்கி விடாதவை என்பதே உண்மை.

இந்த கொண்டாட்டம் நடைபெறும் அதேவேளையில், எழுபத்தைந்தாவது (75) ஆண்டின் கொண்டாடத்திற்காக – ஐக்கிய நாடுகள் சபை முதல் நாடுகள் ரீதியாக, அரசு சார்பற்ற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் கொண்டாடுவதற்கு ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றது. இவைகளில் எந்த கலந்துரையாடல்களும் கொண்டாட்டங்களும் பாதிக்கப்படடவர்களின் இடங்களுக்கு கொண்டு செல்லப்படப்போவதில்லை என்பதே உண்மை

இவ்வாறிருக்கையில். இலங்கையில் மனித உரிமை தினம் ஒவ்வொரு வருடமும் வந்து செல்கிறது.ஆனால் சர்வதேச மனித உரிமை பிரகடனம் இலங்கையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் பிரான்ஸ் வாழ் அரசியல் விமர்சகரும் அரசியல் செயற்பாட்டாளருமான ச. வி. கிருபாகரன் அவர்கள். இலங்கையிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கருத்துச் செறிவுள்ளதும். மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு கிடைக்கும் ‘மரியாதைகள்’ எவ்வாறு இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றது.

2009 மே மாதம் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களுக்காக விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் அடிப்படையில் அரசாங்கம் என்ன செய்துள்ளது? யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் இன்று என்ன நடக்கிறது? தெற்கில் – 1971 மற்றும் 80களின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் எழுச்சியின் போது இடம்பெற்ற காணாமல் போனவர்கள் – ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜேவீர உட்பட பலர் தன்னிச்சையாக கொல்லப்பட்டது பற்றி என்ன செய்துள்ளார்கள். இவ்வாறு தமிழ் செயற்பாட்டாளர்களள் பற்றி மட்டுமல்ல பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் பற்றியும் ச. வி. கிருபாகரன் அவர்கள். தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பி வருகின்றார்.

இலங்கையில் எமது தமிழர்களின் ஆள் கடத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களை ஆய்வு செய்யும் போது, இவை யாவும் இலங்கை அரசினதும் சிங்கள படையினரிதும் தமிழர் விரோத செயற்பாடாகவும் எமது மக்களின் சனத்தொகையைக் குறைக்கும் அரசியல் சூழு்ச்சி அடங்கியநிகழ்ச்சி நிரல் என்பது தெளிவாகிறது. என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

கடந்த சில மாதங்களாக எமது மக்கள் மீண்டும் ஏமாற்றப்படவுள்ள அத்தியாயங்கள் இன்னொரு தடவையும் எழுதப்படவுள்ளதாக ஆட்சியை தலைமைதாங்கும் ரணிலும் அவரது நீண்ட நாள் நண்பர்களாக விளங்கும் தமிழ்த் தலைவர்களும் காட்சிப் படுத்த முனைகின்றனர். இரணடு தரப்பினருமே கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக எமது மக்களை ஏமாற்றியே வந்துள்ளனர் தங்கள்அரசியல் பதவிகளை தக்கவைத்துக்கொண்டு உல்லாச வாழ்க்கையையும் அரசு வழங்குகின்ற சுகபோகங்களையும் சலகைளையும் எதிர்பார்த்தே இந்த ஏமாற்று வேலைகள் பற்றி மீண்டும் அறிவிப்புகளை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எண்ணில் அடங்காத அளவில் பாதிக்கப்பட்ட எம்மவரின் வேண்டுகோள்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு மனிதி உரிமைகள் மதிக்கப்படுவதற்கு பதிலாக மிதிக்கப்படுகின்ற நிலையில் உள்ள போது இந்த பேச்சு வார்த்தைகள் அவசியமற்றவை என்பதே தமிழ் மக்களின் கருத்தாக உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எம்மைப்பொறுத்தளவில் தகுந்த ஒரு நேரத்தில் தான் இந்தக் கட்டுரையை ச. வி. கிருபாகரன் அவர்கள் வடித்துள்ளார் என்றே நம்புகின்றோம். இது ஒரு சர்வதேச குற்றவியல் குற்றம். இவற்றின் அடிப்படையில், முதற்கட்டமாக, காவல்துறையும் மற்ற அரசு படைகளும் இடைத்தரகர்களாக தமிழர்களை எந்தவித காரணமுமின்றி அன்றாடம் துன்புறுத்துகின்றனர். அரசின் மறைமுறை உதவியோடு, அரசிற்கு நெருக்கமாகப் பணிபுரியும் நபர்கள், போக்குவரத்தை ஏற்பாடு செய்து, தமிழர்களை நடுக்கடலில் கைவிடுகின்றனர். இவை அனைத்தையும் நன்கு தெரிந்து வைத்துள்ள தமிழர் தலைமைகள் மீண்டும் மீண்டும் பதவித் தாகத்தோடு தவிப்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்