LOADING

Type to search

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலி | திருமதி. திலகவதி செல்வராஜா (திருநெல்வேலி)

Share

யாழ்ப்பாணம். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. திலகவதி செல்வராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
மங்களமாய் மங்கையர் திலகமாய் வாழ்ந்தவளே. எங்கு சென்றாய்?
குடும்பம் எனும் கோயிலைக் கட்டிக் காத்த தெய்வமே
திடீரென நீ மறைந்த மாயம்தான் என்ன
கண்ணுக்கு இனிய துணைவரையும் கண்ணிறைந்த
செல்வப் புதல்விகள் ஐவரையும். குடும்பத்தின் சொத்தாகப் பெற்றெடுத்த
முத்துக்கு முத்தான செல்வப்புதல்வனையும்
கொஞ்சும் மழலைகள் பேசும் பிஞ்சுப்பேரக் குழந்தைகளையும்
கங்கும். பகலும் கண்ணுறங்காது. நெஞ்மதில் நிறுத்திப் பூரித்து மகிழ்ந்த
தெய்வமே எங்கே சென்றாய்
கனடா வந்து களிப்புடன் செல்வமகனுடனும். செல்வங்களோடும் வாழ
எண்ணியிருந்தவேளை காலன் செய்த கோலம்தான் என்ன?
இல்லமது நாடி வந்தோரை, இன்முகமாய் நின்று இதமாய் விருந்தோம்பி
அவர்களின் இதயமதில் நிறைந்தவளே எங்கு சென்றாய
உற்றார் என்றால் உருகி நிற்பாய். உற்றார். சுற்றத்தார் உறவைப்பேணி.
அற்றார்க்கு உதவும் அம்மையே எங்கு சென்றாய்
தேடுகின்றோம். காணவில்லையே!
உன் கண்ணில் கருணை, பேச்சினிலே இனிமை. சினம் இன்றி மனம்
திறந்து இத் தரணிதனில் வாழ்ந்த உத்தமி நீ
கண்மூடி முழிப்பதற்குள் பேச்சிழந்து மறைந்த மாயம்தான் என்ன?
நான் வளர்த்தவளே, காலமெல்லாம் என்னை வாழ்த்தியவளே!

நான் ஊர் வந்தபோது உன்னோடு நிறையப்பேசவில்லை.
நெஞ்சம் குமுறுகின்றேன் நீ எப்படிப் போனாய்
இன்றும் துடிக்கின்றேன் அம்மா! ஆறாது.
ஆறாது அழுதாலும் ஆறாது…
எவர்தாம் எம்மைத் தேற்றுவார்?
பொல்லாத காலன் சொல்லாமல். கொள்ளாமல் அவசரமாய்
உன்னை அழைத்ததேனோ
அம்மா! எங்கள் திலகமே நீ வாழ்ந்த திருவாழ்வும்
நீ செய்த புண்ணியமும். என்றென்றும் நிலைத்திருக்கும்

எங்கள் அருமைத் தாயே உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு. எங்கள் பாசமுள்ள தாயாரின் மறைவுச் செய்தியறிந்து எம்மைத் தொடர்பு கொண்டு, நேரில் வந்தும் அஞ்சலிசெய்தும் அனுதாபம் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

இங்ஙனம்

உன் பிரிவால் துயருறும்: குடும்பத்தினர்

சுரேஷ்குமார், தீபா, இந்துகா (கனடா), விஜிதா (லண்டன்), சிந்துஜா (இலங்கை), பகீரதி (பிரான்ஸ்) பொற்கொடி கந்தசாமி (சிறியதாய், கனடா) 289-660-3705