LOADING

Type to search

விளையாட்டு

டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு

Share

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை முழுவதுமாக இந்திய அணி வென்ற நிலையில் 3 போட்டிகள் டி20 தொடரின் முதல் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் தொடங்குகிறது.

ஒருநாள் போட்டியில் ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில் பல வீரர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தும் நிலையில், இஷான் கிஷன், ஷுப்மன் கில் தொடக்கவீரர்களாக களம் இறங்குகின்றனர். பிரித்தீவ் ஷா அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவருக்கு விளையாட இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து ருத்துராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். ஒரு நாள் தொடரை முழுமையாக இழந்துவிட்ட நிலையில், டி20 போட்டியிலாவது வெல்ல நியூசிலாந்து அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் குல்தீப், உம்ரான் மாலிக், ராகுல் திரிபாதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி : சுப்மன் கில், இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஹர்டிக் பாண்டியா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், ஹர்தீப் சிங், ஷிவம் மவி

நியூசிலாந்து அணி : ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர்(கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்