LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்நாடு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி அபிஷேகம்

Share

வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நித்ய ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி மாதாந்திர ஏகாதசிகளில் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு , தன்வந்திரி ஹோமமும், நெல்லிப்பொடி கொண்டு அபிஷேகமும் நடைபெற்று வருவது வழக்கம்.

இன்று பிப்ரவரி1ம்தேதி ஏகாதசியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் நெல்லிப்பொடி, பால், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, பன்னீர் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் ,பூஜையும் நடைபெற்றது.

இந்த ஹோமம் மற்றும் பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து, பிரசாதமும், பீடாதிபதி முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.

வருகிற 5ம்தேதி தைப்பூச தினத்தில் பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள், பெண்களுக்கு தோஷங்கள், திருமணத்தடைகள் அகல வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற வேண்டி சந்தான கோபால யாகம் ஆகிய ஹோமங்கள் நடைபெறுகிறது. முன்னதாக 5ம்தேதி அன்று காலை கோ பூஜையுடன், காலச்சக்கர பூஜையும் பின்னர் கலச பூஜை, லோக ஷேம ஆரத்தியுடன் ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் கலசாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.