Toronto Mayor, His Worship, John Tory made a Visit to Majestic City Indoor Shopping Complex in Scarborough, along with Deputy Mayor Jennifer McKelvie and Jamaal Myers.
Share
ரொறன்ரோ மாநகர மேயர் பிரதி மேயர் ஜெனிபர் மெக்லீவ் மற்றும் கவுன்சிலர் ஜமால் மையர்ஸ் ஆகியோரோடு ஸ்காபுறோவில் அமைந்துள்ள Majestic City Indoor Shopping Complex விஜயம் செய்தார்.
இந்த விஜயத்திற்கான ஏற்பாட்டை கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனமும் Majestic City Indoor Shopping Complex நிர்வாகவும் செய்திருந்தன.
அன்றைய தினம் பல மணி நேரம் Majestic City வர்த்தக வளாகத்தினுள் அமைந்துள்ள தமிழர் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களைச் சந்தித்து உரையாடிய மேயர் குழுவினர் மற்றும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தேவதாஸ் அவர்கள் மற்றும் சம்மேளனத்தின் சிரேஸ்ட உப தலைவர் அரி அரன் அவர்கள் ஆகியோரும் அவர்களின் தேவைகளையும் தேவையான ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர்.
இவர்களது வருகையினால். அங்குள்ள வர்த்தக நிறுவனங்களின் உ ரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து அங்கு அழைக்கப்பட்டிருந்த தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம ஆசிரியர்கள் ஆகியோரொடும் குழுவினர் உரையாடினர்கள்.
கேள்வி நேரத்தின் போது உரையாடிய
”கனடா உதயன் ”பிரதம ஆசிரியர் அவர்கள் ” கௌரவ நகர பிதா அவர்களே! தங்கள் சேவைக்காலத்தில் ஒவ்வொரு தடவையும் தாங்கள் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை தங்கள் அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தியிருந்தீர்கள். அதற்காக எமது சமூகத்தின் சார்பாகவும் ஊடக நிறுவனங்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்” என்ற தனது அறிமுகத்தை பகிர்ந்து கொண்ட பின்னர், முக்கியமாக கேள்வி ஒன்றை அவரிடம் முன்வைத்தார்.
‘ நகர பிதா அவர்களே!. தற்போது கூட கோவிட் நோய்த் தொற்று முற்றாக நீங்கி விட்டதாக இல்லை. சில குடும்பங்களில் அனைத்து உறுப்பினர்களுமே நோய்த் தொற்றுக்கு உள்ளாகி அவதிப் பட்டு சிலர் உயிர் இழக்கவும் நேர்ந்தது. ஆனால் முன்னரைப் போல. மாகாண மருத்துவ அதிகாரியோ அன்றி தங்கள் மாநகரசபையின் மருத்துவ அதிகாரியோ எவ்விதமான கருத்துக்களையும் ஊடகங்களிடமோ அன்றி பொது மக்களுக்காகவோ பகிர்ந்து கொள்வதில்லை. இந்த மௌனம் எதற்காக? அனைத்துமே தீர்க்கப்பட்டு விட்டதா? அல்லது அதிகாரிகள் ‘களைத்துப் போய்விட்டார்களா?” என்று திடீரேன கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு மிகவும் பொறுமையாகவும் தகவல்களோடும் அதிக நேரம் எடுத்து பதிலளித்த மேயர் அவர்கள் நாளையோ அன்றி அடுத்த நாளோ நகர சபை மருத்துவ அதிகாரியோடு தொடர்பு கொண்டு தங்கள் ஊடக நிறுவனங்களுக்கு விபரங்களை அறிவிப்பேன்’ என்றார்.
அந்த இடத்தில் அப்போது வர்த்தக அன்பர்களும் ஊடக அன்பர்களும் கூடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.