LOADING

Type to search

விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் போட்டி| பிரதமர் மோடி நேரில் காண்பார் என தகவல்

Share

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான, கவாஸ்கர் – பார்டர் டெஸ்ட் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரதமர் மோடி நேரில் கண்டு ரசிப்பார் என்று தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. அகமதாபாத்தில் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பிரதமர் மோடி பெயரில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் கடந்த 2020 பிப்ரவரி 24- ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த மைதானத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும்.

இப்படியொரு பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட்ட பின்னர், பிரதமர் மோடி ஒரு முறை கூட இந்த மைதானத்திற்கு வந்து கிரிக்கெட் போட்டியை பார்த்ததில்லை. இந்நிலையில் உலகில் மிக முக்கிய டெஸ்ட் தொடராக கருதப்படும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கடைசி போட்டியை, பிரதமர் மோடி நேரில் கண்டு ரசிப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கவாஸ்கர் – பார்டர் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூரில் நடைபெறுகிறது. 2 ஆவது போட்டி வரும் 17ஆம் தேதி டெல்லியிலும், 3 ஆவது போட்டி மார்ச் 1-ஆம் தேதி தர்மசாலாவிலும், 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 9ஆம் தேதியும் ஆரம்பமாகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும். இதனால் இந்த கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அகமதாபாத்தில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியை, பிரதமர் மோடியுடன் இணைந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நேரில் கண்டு களிப்பார் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.