LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 180 குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக 3 மாத உலர் உணவு பொருட்கள்

Share

(மன்னார் நிருபர்)

(06-02-2023)


மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(6) மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

‘வைற்றல்’ நிறுவனத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) மன்னார் மாவட்டத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை தொடர்ச்சியாக எதிர்வரும் 3 மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், விசேட தேவைக்குரிய குடும்பங்கள், மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட அடிப்படை சட்ட உதவி தேவையுடைய குடும்பங்கள் உள்ளடக்கப்பட்டு குறித்த உலர் உணவு வழங்கப்பட்டது.

வாழ்வாதாரத்துடன் கூடிய நிவாரணம் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் வழங்குவது என்ற அடிப்படையில் 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் மற்றும் வாழ்வாதாரம் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதல் கட்ட பணிகள் இன்று திங்கட்கிழமை (6) முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு,. சவேரியார் புரம், காயாக்குளி, கரடிக்குளி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 33 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக ஏனைய குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.