மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையிலான குழுவினர் தலைமன்னார் விஜயம்
Share
(மன்னார் நிருபர்)
(10-02-2023)
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை(9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம்,கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை(10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
-மன்னாரிற்கு விஜயத்தை மேற்கொண்ட குறித்த குழுவினர் இன்று வியாழன் (10) மாலை தலைமன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த குழுவினருடன் யாழ்ப்பாண – இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கர் ,இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் , ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது தலைமன்னார் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை(10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தனர்.
இதன் போது விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு,இந்திய அரசின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு,ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
-அதனைத்தொடர்ந்து மன்னாரில் இடம் பெற்ற இலங்கை – இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் தலைமன்னார் பகுதிக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.