LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் படைப்பாளிக்கு தமிழகப் பதிப்பகம் நடத்திய குறுநாவல் போட்டியில் இலங்கைப் பணம் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு

Share

தமிழகத்திலுள்ள ஸீரோ டிகிரி பதிப்பகம் கடந்த வருடம் சிறுகதை, குறுநாவல், நாவல் போட்டிகளை நடத்தியது. குறுநாவல் போட்டியில் இலங்கை சாவகச்சேரியைச் சேர்ந்த தாட்சாயணி என்னும் பெண் படைப்பாளியின் குறுநாவலான ‘தீநிழல்’ பரிசு பெற்றது.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் பிரதேச செயலாளர் பதவி வகிப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் டி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் நேரடியாக கலந்து கொள்ள இயலாத காரணத்தால் தாட்சாயணி அவர்களுக்குரிய விருது, மற்றும் பரிசுத்தொகை இந்திய ரூபா இருபதாயிரம் மற்றும் குறுநாவல் தொகுப்பு ஆகியவற்றை எம். ஜி. ஆர். ஜானகியம்மாள் கல்லூரி முனைவர் குமார் ராஜேந்திரன் பெற்று இலங்கைப் பதிப்பாசிரியர் எச். எச் விக்கிரமசிங்க அவர்களிடம் கையளித்திருந்தார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான எச். எச் விக்கிரமசிங்க பரிசுத்தொகை இலங்கைப் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவினையும், விருதையும், பரிசு பெற்ற குறுநாவல் பிரசுரமான நூலையும், தாயகத்து படைப்பாளி தாட்சாயணியிடம் வழங்கினார்.

அப்பொழுது எடுக்கப்பெற்ற படம் இங்கு காணப்படுகின்றது- பரிசு பெற்ற படைப்பாளி தாட்சாயிணியை கனடா உதயன் ஆசிரிய பீடம்  வாழ்த்துகின்றது

தகவல்- எச். எச். விக்கிரமசிங்கு கொழும்பு