LOADING

Type to search

இலங்கை அரசியல்

மின் கட்டண அதிகரிப்பு மக்களை சாவா? வாழ்வா? என்ற நிலைக்குள் தள்ளி இருக்கிறது- கல்முனை மாநகர சபை உறுப்பினர்

Share

(17-02-2023)

அரசாங்கத்தின் திடீர் மின் கட்டண அதிகரிப்பானது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறிமிதித்தது போல சாவா வாழ்வா என்ற இழிநிலைக்கு தள்ளி இருக்கின்றது. எனவே உடனடியாக மின் கட்டணஅறிவிப்பை நிறுத்த வேண்டும் எனல்முனை மாநகர சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் வெள்ளிக்கிழமை(17) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.

அரசாங்கம் மின் மின்கட்டண அதிகரிப்பை ஏற்படுத்தி உணவு பொருட்கள் தொடக்கம் சகல பொருட்களுக்கும் விலையை உச்ச கட்டத்துக்கு சென்று இருக்கின்றது அரசாங்கம்.
ஏலவே பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதல பாதாளத்திற்கு செல்ல வேண்டிய ஏற்பட்டு இருக்கின்றது.

மின்தடைக்கு காரணம் நிலக்கரி இன்மை போதிய தண்ணீரின்மை எரிபொருள் இன்மை என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இன்று மின்கட்டணம் உயர்த்தி மறுகணமே மின்தடை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இதிலிருந்து இவ்வளவு நாளும் அரசாங்கம் பச்சைப் பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றது என்பதனை தெரியலாம்.

இதே போன்று தான் எரிவாயு பிரச்சனை. ஆரம்பத்தில் எரிவாயுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பின்னர் விலையை உச்ச கட்டத்துக்கு கொண்டு போனதும் எரிவாயு தாராளமாக கிடைக்கிறது .அது போல மின்சாரத்திற்கும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதாவது மின்தடையை ஏற்படுத்தி இப்பொழுது மின் கட்டணத்தை உச்ச கட்டத்துக்கு கொண்டுசென்றிருக்கின்றது.

எனவே மக்கள் இருட்டிலே இருக்க விரும்புகின்றார்கள். மீண்டும் இந்த மின்தடையை ஏற்படுத்தி மின்கட்டணத்தை குறைத்தாலும் பரவாயில்லை என்று கூறுமளவிற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.