LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல்

Share

(மன்னார் நிருபர்)

(17-02-2023)

மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை வெள்ளிக்கிழமை காலை(17) மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் சார் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை செயற்பாடுகளில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, இந்தியக் கடற் றொழிலாளர்களின் அத்துமீறலினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய கடற்றொழிலாளர்கள், குறித்த அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்கு போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.

கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியது டன், முழுமையாக சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழிலாளர்களின் பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.