LOADING

Type to search

இலங்கை அரசியல்

குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி

Share

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்ட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததின் காரணமாக 700க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்களில்பொதிவரும் பருவத்தில் நெற்பயிர்கள் தண்ணீருக்காக காத்திருக்கிறது. வழக்கமாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அப்போது கங்கைகொண்டான் பகுதியில் உள்ள விவசாயி இரோசியஸ் என்பவர் தங்கள் பகுதியில் உள்ள சிந்தான்குளம் என்ற குளத்தை காணவில்லை என ஆட்சியரிடம் மனு அளித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குளம் தூர்வாரப்பட்டுள்ளது. கடந்தாண்டு வரை மீன்பாசி ஏலம் விடப்பட்டு அதற்கான தொகையும் அரசுக்கு கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு குளம் இருந்த இடமே தெரியவில்லை குளத்தை கங்கைகொண்டான் சிப்காட் பகுதியோடு இணைக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது என கூறினார்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வடிவேலு பட பாணியில் குளத்தை காணவில்லை என ஆட்சியரிடம் விவசாயி புகார் அளித்த சம்பவம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.