உலக வனஜீவராசிகள் தினம் மன்னாரில் அனுஸ்ரிப்பு
Share
மன்னார் நிருபர்
03.03.2023
சர்வதேச வனஜீவராசிகள் தினத்தை முன்னிட்டு வனவிலங்குகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான விசேட நிகழ்வு வெள்ளிக்கிழமை(03) மன்னார் வனவள திணைக்கள அலுவலகத்தில் தேசிய வனஜீவராசிகள் திணைகளத்தின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது.
தேசிய வனவிலங்குகளை பாதுகாக்கும் முகமாகவும் அதே நேரம் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் பாதுகாக்கப்படும் விலங்குகளின் மரணம் மற்றும் மனிதர்களினால் வேட்டையாடப்படுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அவற்றுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குறித்த தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.
வட மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தி உலக வனயீவராசிகள் தினம் இம்முறை மன்னாரில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வுக்கு வனவிலங்கு திணைக்களத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதி முகாமைத்துவப் பணிப்பாளர் மஞ்சுள அமரரத்ன ,வவுனியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விஜயமோகன் ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவுகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக யானை மனித மோதல் தொடர்பாகவும் மனிதர்களால் யானைக்கு ஏற்படும் பாதிப்பு யானையால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் வனஜீவராசிகள் தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற கட்டுரை மற்றும் ஆக்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் பரிச்சில்களும் வழங்கி வைக்கப்படது