LOADING

Type to search

இலங்கை அரசியல்

பாண்டியன்குளம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Share

ஈழமகன் முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கெதிராக நட்டாங்கண்டல் மக்கள் இன்று மாலைஇலிருந்து இரவு வரை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்கள்

வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவரை கைது செய்து அழைத்து வந்துள்ளதாகவும் ,குறித்த வீட்டில் மணல் இருந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் மன்னாருக்கு சென்றிருந்த சந்த்ஸ்ரப்பத்தில் அவர் இல்லாத பட்ஷத்தில் அங்கு வீட்டின் காவலுக்காக இருந்த உரிமையாளரின் தந்தை 68 வயது முதியவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்யாது பொலிஸார் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அப்பாவிகளை கைது செய்வதாகவும் தெரிவித்த மக்கள், பொலிஸார் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க ஊக்கமளிப்பதாகவும், அப்பாவிகளை பொலிஸார் பழிவாங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரால் குறித்த வீட்டில் இருந்து ஏற்றப்பட்ட மணலும் இதுவரை போலிஸ் நிலையத்தில் கொண்டுவரப்படவில்லை என்றும் , உரியவரை கைது செய்யாமல் அப்பாவிகள் கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள்

கூலிக்கு ஆடு மேய்த்த முதியவரை கைது செய்தமையை கண்டிக்கின்றோம் , உடன் விடுதலை செய்,நடவடிக்கைக்குரியவரை கைது செய் , சம்மந்தம் இல்லாதவரை விடுதலை செய் போன்ற சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்

இதே வேளை கடந்த 25-03-2022 அன்று அனுமதிபத்திர விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் நட்டாங்கண்டல் பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டிருந்ததுடன், அன்று இரவே 10 மணியளவில் இரு உழவு இயந்திரங்களும் மின்சாரத்தை இடைநிறுத்தி வெளியில் விடப்பட்டிருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்த பொலிசார் அனுமதியற்ற முறையில் மணல் யாட் வைத்திருந்ததாக 68 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளாதாக தெரிவித்துள்ளனர்

இதேவேளை வீட்டில் வைத்திருந்த மணலினை ஏற்றுவதற்கு பொலிசாருக்கு யார் அனுமதி கொடுத்தது , அத்துமீறி மணல் ஏற்றி செல்பவர்களை வேடிக்கைபார்க்கும் போலீசார் தம்மீது மட்டும் அதுவும் மணல் ஏற்றும்போது கைது செய்யப்பட்டாலும் பரவாயில்லை , அராஜக போலீசார் என்று கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்

இதே வேளை கைதான வயோதிபரை பார்வையிட சென்ற இளைஞரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகாத வார்த்தைகளை பிரயோகித்து அடிக்க வந்ததாகவும், வெளியில் செல்லுமாறும் விரட்டியதாகவும் தெரிவித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போலீசார் அச்சுறுத்தும் விதமாக தமது தொலைபேசிகளில் காணொளி பதிவை செய்துகொண்டிருந்தனர்