LOADING

Type to search

இலங்கை அரசியல்

மகளிர் தினம் பெண்களால் கொண்டாடப்படுவதை விட ஆண்களினால் கொண்டாடப்படுகின்ற மை சிறப்பான விடையம்

Share

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி ந.நிசாந்தினி

(மன்னார் நிருபர்)

(11-03-2023)

மகளிர் தினம் பெண்களினால் கொண்டாடப்படுவதை விட குறித்த மகளிர் தினத்தை ஆண்களின் ஏற்பாட்டில் கொண்டாடப்படுகின்ற போது அது மிகவும் பெருமைக் குரியதாகவும்,சிறப்பான ஒரு விடயமாகவும் அமைகிறது என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி ந.நிசாந்தினி தெரிவித்தார்.

-மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை(11) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டிருந்தார்.

-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி ந.நிசாந்தினி தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் ,,,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை யை பொறுத்தவரையில் சுமார் 95 வீதமான தாதியர்கள் பெண்களாக உள்ளனர்.அதே போன்று சுகாதார பணி உத்தியோகத்தர் களில் 80 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர்.

இவ்வளவு பெருமைகளை சுகாதாரத்துறை கொண்டுள்ள போதும் நிர்வாக கட்டமைப்பு என்று பார்க்கின்ற போது உயர் நிலைக்கு வருகின்ற பெண்களின் சதவீதம் மிக குறைவாக உள்ளது.

-ஆனால் மன்னார் மாவட்டம் பெருமை கொள்ளக்கூடிய ஒரு விடையமாக மன்னார் மாவட்டத்தின் முதல் பிரஜையாக மாவட்ட அரசாங்க அதிபராக உள்ளவர் ஒரு பெண் என்பது ஒரு மகிழ்ச்சியான விடையம்.

-மகளிர் தினம் பெண்களினால் கொண்டாடப்படுவதை விட குறித்த மகளீர் தினம் ஆண்களின் ஏற்பாட்டில் கொண்டாடப்படுகின்ற போது அது மிகவும் பெருமைக் குரியதாகவும்,சிறப்பான ஒரு விடயமாகவும் அமைகின்றது.

மகளிர் தின நிகழ்வை மன்னாரில் ஏற்பாடு செய்த மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஒரு ஆண்.அவர் மன்னாரில் இவ்வாறான ஒரு மகளிர் தின நிகழ்வை முன் னெடுத்துள்ளமை மிகவும் மகிழ்ச்சிக்கூறிய விடையம்.

அதற்காக எமது நான்றிகள்.அத்துடன் தந்தையாக,தனயனாக,குருவாக,தோழர்களாக,கணவனாக,மகனாக பெண்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து ஆண்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கின்றேன்.என தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பெண் உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக பல நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

-இதன் போது பெண்களினால் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கௌரவிக்கப்பட்ட தோடு தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.