முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்காவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
Share
(21-03-2023)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவிற்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா செட்டிக்குளத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் அவர் சாட்சிகளை அச்சுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய வழக்கின் விசாரணைக்கும் சரியாக அவர் முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து கடந்த 17ஆம் திகதி அவருக்கு வவுனியா நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.
அதனையடுத்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜே.ஶ்ரீரங்கா கடந்த 18ஆம் திகதி கல்கிஸ்சை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை நேற்றைய தினம் (20) வரை விளக்கமறியலில் வைக்கவும், வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் நேற்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றில் ஶ்ரீரங்கா முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதே தோற்றத்தில் ஶ்ரீரங்கா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.