மன்னாரில் பயனாளிகளுக்கு உலர் உணவு மற்றும் சுய தொழில் நடவடிக்கைகளுக்காக கோழிகள் வழங்கப்பட்டன
Share
(மன்னார் நிருபர்)
(04-04-2023)
மன்னார் மெசிடோ நிறுவனத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்றைய தினம்(04) செவ்வாய்க்கிழமை மூன்றாவது கட்டமாக உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட தொடு, சுய தொழிலை மேம்படுத்தும் வகையில் ஒரு தொகுதி கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள,பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளடங்களாக 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வந்தது.
மேலும் 3 மாதம் முடியும் போது அவர்கள் விரும்பிய சுய தொழிலை மேற்கொள்ள சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சுய தொழில் மூலப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(4) 30 பயணாளிகளுக்கு 3 ஆம் கட்ட உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு,அவர்கள் சுய தொழிலை மேற்கொள்ள 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
-மன்னார் மெசிடோ நிறுவனத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(4) மதியம் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,விற்றோல் திட்டத்தின் வடமாகாண கண்காணிப்பு இணைப்பாளர் எஸ்.ஏ.ரெக்ஸ் மற்றும் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டு குறித்த உதவித் திட்டத்தை வழங்கி வைத்த மையும் குறிப்பிடத்தக்கது.