LOADING

Type to search

விளையாட்டு

IPL 2023 : கவுகாத்தியில் நடைபெறும் வடகிழக்கு இந்தியாவின் முதல் ஐபிஎல்

Share

ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் டி-20 வகை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஸ்டேடியம்களும் தயாராகி வரும் நிலையில், வடகிழக்கு இந்தியாவில் முதன் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கிழக்கு இமயமலை, பிரம்மபுத்திரா நதிகள் ஓடும் அசாம் , அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, மேகாலயா அடங்கிய வடகிழக்கு மாநிலங்கள் மலைப் பிரதேசங்களாக இருப்பதால் இங்குள்ள மைதானங்களில் ஐபிஎல் தொடர்கள் ஏதும் நடத்த ஏற்பாடு செய்யப்படவில்லை.

எனினும் ஐபிஎல் 2020 இல் ராஜஸ்தான் ராயல்ஸின் இரண்டு ஆட்டங்கள் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நடத்தப்படவிருந்தன. இருப்பினும், கோவிட்-19 காரணத்தால் சீசன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் UAE இல் மீண்டும் தொடங்கப்பட்டது. எனவே, இந்த முக்கியமான நிகழ்வை நடத்தும் வாய்ப்பை மைதானம் இழந்தது. இப்போது, ​​மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட இருக்கும் இரண்டு ஐபிஎல் போட்டிகள் கவுகாத்தியில் பர்சபரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸின் பெரும்பாலான போட்டிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்தாலும் 2 போட்டிகள் மட்டும் வடகிழக்கு பகுதியில் நடக்க இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் ரியான் பராக் ஒருங்கிணைந்த வீரர்களில் ஒருவர், ஆல்-ரவுண்டர் . அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர், இந்த போட்டிகள் மூலம் முதல் முறையாக தனது சொந்தக் மக்களின் முன் இவ்வளவு பெரிய போட்டியை விளையாட இருக்கிறார்.

கவுகாத்தியில் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியை மறக்க முடியாததாக ஒரு நிகழ்வாக மாற்ற ஏசிஏ லேசர் ஷோக்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டுள்ளது. அஸ்ஸாம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் இருந்தும் நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, போட்டிக்கு முன்னதாக பர்சபரா ஸ்டேடியத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது அவர் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.