நினைவஞ்சலி | திருமதி கமாலாவதி இராமநாதன்
Share
மொன்றியல் வாழ் ஓய்வு பெற்ற ஆசிரியையும், தமிழ்மொழி ஆர்வலரும், இனமான உணர்வாளருமாகிய திருமதி கமலாவதி இராமநாதன் அம்மையார் அவர்களுடைய மறைவு அறிந்து யாழ், திருநெல்வேலியிலிருந்து வீணை மைந்தன் அவர்கள் அனுப்பி வைத்த
நினைவஞ்சலி
மண் மீது புகழுடைத்த மாதகல் மாதரசி
“அறியவற்றுள் எல்லாம் அறிதே பெரியாரைப்
பேணித் தமராகக் கொளல்” – திருக்குறள்
பொய்யாமொழிப் புலவரின்
மெய்யான வாக்கிற்கமைய
சேயோன் திருவடியை தினமும்
நினைந்துருகும் மாதகல் மாதரசி
மாணவர்க்குத் தமிழ் புகட்டும் தமிழரசி
வானவர்கள் அழைப்பேற்று
வானுலகம் போயினளே!
பெறுதற்கரிய பாக்கியம்
பெரியோரை எமதாக்கிக் கொள்ளுதலே
அவ்வாறே, எந்தனுக்கு வாய்த்த நல் ஆசாள்
தமிழ் மாது தமிழாலே உறவாடி
தமிழெடுத்துக் கவியெழுதி
மணிவிழா – பவளவிழா காண்கையிலே
கற்கண்டு தமிழூறும் கரும்பின் சுவையாக
பாட்டிசைத்த பாரதியின் செல்ல மகள்
நாட்டு மக்கள் நலன் விரும்பும் நல்ல மகள்
கூட்டுக்களியினிலே கவிதைகள்
கொண்டு தரப் போனாளோ!
வீணை மைந்தன் தமிழெனக்கு விருந்தாகும்
என்றுரைக்கும்; நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வையுடன்
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையென
அம்மா கமலாவதி அச்சம் தவிர் எனவே
தாய்க்குலத்தை வீரமுடன் வாழ்வதற்கு
சோர்வின்றி சொல்லும் உரை – அவர்
மறைந்தாலும் காற்றினிலே கலந்து வரும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அஞ்சலிப்பூக்களுடன்
வீணை மைந்தன்.