LOADING

Type to search

இலங்கை அரசியல்

கனடா Toronto Voice Of Humanity அமைப்பின் அனுசரனையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் நடைபெற்றது.

Share

கனடாவில் கடந்த பல வருடங்களாக சேவை நோக்குடன் இயங்கிவரும் Toronto Voice Of Humanity அமைப்பின் அனுசரனையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள இரத்த பற்றாக்குறையை போக்கும் நோக்கொடு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு (08) சனிக்கிழமை மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு கணிஷ்ட வித்யாலயத்தில் நடைபெற்றது.

சக்தி மற்றும் காந்தி விளையாட்டு கழகங்கள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் பின்பு இரத்தம் வழங்கும் நிகழ்வு ஒவ்வொரு 6 மாத கால இடைவெளியில் நடாத்தவள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர்கள் தெரிவித்தனர். வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் மற்றும் தாதியர்கள் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.

மற்றும் 50 க்கு மேற்பட்ட நன்கொடையாளர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் அமைப்பினூடாக வழங்கி வைக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களிலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் இவ்வாறான மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு புலம் பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களின் ஆதரவு தேவை என்பதும் இந்த நிகழ்வின் மூலலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.