LOADING

Type to search

விளையாட்டு

துலீப் ட்ராபி – ரஞ்சி கோப்பை போட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு

Share

2023 – 24 ஆம் ஆண்டுகளுக்கான உள்ளூரில் நடைபெறும் முதல் தர போட்டிகளான துலீப் ட்ராபி மற்றும் ரஞ்சி கோப்பை தொடர்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. துலீப் கோப்பை தொடர் ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரஞ்சி கோப்பை அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துலீப் கோப்பைக்கான போட்டிகளில் மொத்தம் 6 மண்டல அணிகள் பங்கேற்கின்றன.

இதைத் தொடர்ந்து தியோதர் கோப்பைக்கான போட்டிகள் ஜூலை மாதம் 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையிலும், இராணி கோப்பை அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரையிலும், சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டி அக்டோபர் 16 ஆம்தேதி தொடங்கி நவம்பர் 6 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டிகள் நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உள்ளூர் முதல் தர போட்டிகளில் ரஞ்சி கோப்பை தொடர் மட்டுமே கடைசியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் குரூப் லீக் ஆட்டங்கள் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாக் அவுட் சுற்று பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி மார்ச் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக ரஞ்சி கோப்பை தொடர் 70 நாட்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.