LOADING

Type to search

விளையாட்டு

டி20 பேட்டிங் தரவரிசை… தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சூர்யகுமார் யாதவ்..!

Share

சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் சி.எஸ்.கே.அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோனியின் முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து அவர் மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதனால் அவரது முழு திறமையையும் வெளிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.

எனினும் தோனி முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவர் சிறப்பாக விளையாடி வருவதை எல்லோரும் கண்கூடாக பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார். ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு பிளெமிங் இதனை பகிர்ந்துள்ளார். காயம் காரணமாக தோனிக்கு ஓடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிளெமிங் கூறிய நிலையில், பெங்களூருவுக்கு எதிரான சென்னையின் அடுத்தப் போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் சென்னை அணியில் கைல் ஜேமிசனுக்கு பதிலாக வந்த தென் ஆப்பிரிக்கா வீரர் சிசண்டா மகளாவிற்கும் ராஜஸ்தான் அணியுடன் மோதிய போட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் இரு வாரங்களுக்கு இவரால் விளையாட முடியாத சூழல் உள்ளது. இதை தவிர முகேஷ் சவுத்ரி அணியில் இருந்து விலகியுள்ளார்.

மேலும் சிம்ரஜித் சிங், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இப்போது தான் காயத்திலிருந்து மீண்டு வருகின்றனர். காயமானவர்களை தவிர தற்போது சென்னை அணிக்கு இருக்கும் ஒரே ஒரு பாஸ்ட் பவுலர் மதீஷா பதிரானா மட்டும் தான். அவரும் கடந்த திங்களன்று தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு அணியில் சேர்ந்தார். இதற்கு மேலும் அணியில் யாருக்கும் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கவலை தெரிவித்துள்ளார்.