LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா வாழ் புங்குடுதீவு அன்பர்கள் ஓன்றாகக் கூடி அனுஸ்டித்த மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கம் அவர்கள் மறைந்த 50வது ஆண்டு தினம்

Share

இலங்கையின் வடபுலத்தின் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனாக தன்னை அடையாளப்படுத்தியும் குறிப்பாக சாதீயத்திற்கு எதிராக எழுதியும் பேசியும் வாழ்ந்து மடிந்த மு. தளையசிங்கம் அவர்கள் மறைந்த 50வது ஆண்டு தினம் கனடாவில் கடந்த 09-04-2023 அன்று அனுஸ்டிக்கப்பெற்றது.

மார்க்கம் நகரில் அமைந்துள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமையகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில். நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு அமரருக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவித்தனர்.

எழுத்தாளர் தாம் சிவதாசன் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிலரும் கலை இலக்கியவாதிகளும் உரையாற்றினார்கள்.

அவர்களில் பலரது உரைகள் மிகவும் தரமானதாகவும் அமரர் தளையசிங்கம் அவர்கள் பல்வேறு தளங்களை தரிசித்த வண்ணமும் ஆசிரியராகப் பணியாற்றி அவர் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரைகளும் எவ்வாறு சமூகத்திற்கு பயனாகின என்பதைப் பற்றியெல்லாம் எடுத்துரைத்தன.
தங்கள் மண்ணைச் சார்ந்தவர் என்ற நோக்கில் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் அமரர் மு. தளையசிங்கம் அவர்கள் மீது ஆழமான நேசிப்பைக் கொ;ண்ட அன்பர்கள் சிலரும் அங்கு வந்து இறுதிவரை அமர்ந்திருந்து தாங்கள் பற்று வைத்த படைப்பாளி பற்றிய புகழாரங்களை செவிமடுத்த பூரிப்போடு இல்லம் ஏகினர்.

—–படங்களும் செய்தியும்- மலையன்பன்–