LOADING

Type to search

கனடா அரசியல்

திருக்குறளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி. யு. போப் அவர்களுக்கான நினைவுச் சின்னம் கனடாவில் நிறுவப்படும்

Share

திருக்குறள் நூலில் அடங்கியுள்ள அனைத்துக் குறள்களையும் வாசித்து தெளிந்து அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கனடியரான ஜி. யு. போப் அவர்களைக் கௌரவித்து நினைவு கூரும் வகையில் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும்; நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் விரைவில் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை தற்போது அனைவரிடத்திலும் பரவியுள்ளது.

இந்த வகையில் தமிழ் அறிஞரான ஜி.யு.போப் அவர்களுக்கு, கனடாவின் பிறின்ஸ் எட்வேர்ட் தீவில் அமைந்துள்ள பெடெக் என்ற அவர் பிறந்த கிராமத்தில், நினைவுச்சின்னம் ஒன்றினை அமைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிக்கு பலமும் நிதி யும் சேகரிக்கும் வகையில் இசை நிகழ்ச்சி. இசை நிகழ்ச்சி ஒன்று கனடாவில் நடைபெறவுள்ளது

“அன்புடன் தமிழ் என்ற அழகிய பெயருடன் எதிர்வரும் May 06-2023″ Mega Tune & Agni இசை நிகழ்வுக்கு கனடியத் தமிழர் பேரவை Canadian Tamil Congress (CTC) ஒன்றினை நடத்துவது தொடர்பான அறிவிப்பை கனடிய தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றுக்கு விடுக்கும் வகையில்ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் அண்மையில் மார்க்க்ம் நகரில் அமைந்துள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

தமிழ் மொழி விரிவுரையாளர்களான பொன்னையா விவேகானந்தன் மற்றும் திருமதி ஶ்ரீதாஸ் ஆகியோர் பயனுள்ள உரைகளை ஆற்றினார்கள்.

கனடிய தமிழர் பேரவையின் தலைவர் திரு சிவன் இளங்கோ நிகழ்விற்கு தலைமை தாங்கினார். அத்துடன் கனடாவின் மெகா ரியுனர்ஸ் இசைக்குழுவின் தலைவர் ம. அரவிந்தன் மற்றும் ‘அக்னி’ இசைக்குழுவின் நிறுவனர் திருமதி சில்வியா பிரான்சிஸ் ஆகியோரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு இசை நிகழ்ச்சிக்கு கனடா வாழ் தமிழ் மக்கள் தங்கள் ஆதரவைத் தரவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தனர்.

— செய்தியும் படங்களும்;_ சத்தியன்–