LOADING

Type to search

கனடா அரசியல்

‘வீரகேசரி’ யின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் தனது வெளிநாட்டுப் பயணத்திட்டத்தின்படி கனடா வந்து சேர்ந்தார்.

Share

இலங்கையின் முதன்மைத் தமிழ்த் தினசரியாக விளங்கும் ‘வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள் தனது வெளிநாட்டுப் பயணத்திட்டத்தின்படி இன்று கனடா வந்து சேர்ந்தார்.

தனது குடும்பத்தினர் சகிதம் பயணித்துள்ள அவர் கனடாவில் சில நாட்கள் தங்கியிருந்து நண்பர்கள் உறவினர்கள் பலரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

அத்துடன் சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வுள்ளார்.

நாளை சனிக்கிழமை 15ம் திகதி பிற்பகல் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரியை அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள சந்திப்பும்- உரையாடலும் நிகழ்ச்சியில் பங்கெடுப்பார். இந்த வைபவத்திற்கு முற்பதிவு செய்தவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்த்தக்கது.

அடுத்த நாள் 17ம் திகதி திங்கட்கிழமை மார்க்கம் தோர்ன்ஹில் சட்ட மன்றத் தொகுதியின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் அழைப்பின்பேரில் ஒன்றாரியோ சட்டசபை அமைந்திருக்கும் ‘குயின்ஸ் பார்க்’ வளாகத்திற்க செல்லவுள்ளார். அங்கு அவர்கள் அமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்களைச் சந்திப்பார் என அறியப்படுகின்றது.

இங்கே காணப்படும் படங்களில் வெள்ளிக்கிழமை மாலை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரையும் அவர் குடும்பத்தினரையும் நண்பர் பவான் வரவேற்றார்.

தொடர்ந்து கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் உறுப்பினரும் ‘ரூபம்’ இணைய வானொலி நிலையத்தின் அதிபருமான ராம்சங்கர் சிவநாதன் அவர்கள் பொன்னாடை அணிவித்து அவரை வாழ்த்தி வரவேற்றார்