LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உள்நாட்டு , வெளிநாட்டு தொழிற்சந்தை-ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பங்கேற்பு

Share

(மன்னார் நிருபர்)

(26-04-202)

மன்னார் மாவட்ட செயலக ஏற்பாட்டில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு இன்று புதன்கிழமை( 26) மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்கள் மற்றும் பாடசாலையிலிருந்து இடை விலகியவர்கள் தமது திறன்களை அடையாளம் கண்டு அதனூடாக தமக்கு பொருத்தமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் குறித்த நிகழ்வில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

தொழிற் சந்தையின் முக்கிய விடயமாக பயிற்றுவிக்கப்பட்ட வளவாளர்கள் ஊடாக திறன்களை அடையாளம் காணப்பட்டு அதற்கான வழி காட்டலினூடாக ஒவ்வொருவரும் உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி உயர் கல்வியினூடாக தமது எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் தமது உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் சுமார் 40க்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் உயர் கல்வி வழங்கும் நிறுவனங்கள் , பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் ,வியாபார ஊக்குவிப்பு செயற்பாடுகள் உடன் தொடர்புடைய நிறுவனங்கள் என பல தரப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டது.மேலும் வேலை வாய்ப்பு குறித்து வீதியோர நாடகம் அரங்கேற்றப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.