முழுமையாக முடங்கியது மன்னார் – பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் ஹர்த்தால்-
Share
(மன்னார் நிருபர்)
(25-04-2023)
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை(25) பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொதுமக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளது டன் மன்னார் மாவட்டம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் பயங்கர வாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்ற மை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும்,மதஸ்தலங்கள் தாக்கப் படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றைய தினம் (25) செவ்வாய் கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள துடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது.மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.
அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது