LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘இவர் உங்கள் தந்தையாக இருந்தால் ஒரு துளி குப்பையை கூட சாலையில் போட மாட்டீர்கள்’ மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு.

Share

(மன்னார் நிருபர்)

(27-04-2023)

பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மெசிடோ நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் இன்று வியாழக்கிழமை(27) மாலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

‘இவர் உங்கள் தந்தையாக இருந்தால் ஒரு துளி குப்பையை கூட சாலையில் போட மாட்டீர்கள்’ என்ற வசனம் எழுதப்பட்ட பதாகைகள் வீதியோரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

-ஆரம்ப நிகழ்வு மன்னார் பிரதான பாலத்தடி யில் இன்று வியாழக்கிழமை(27) மாலை இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் மற்றும் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பதாதையை வைபவ ரீதியாக காட்சிப்படுத்தி விழிப்புணர்வு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் மெசிடோ நிறுவன பணியாளர்களினால் மன்னார் நகர பகுதியில் உள்ள பாடசாலை மற்றும் பொது இடங்களில் குறித்த பதாகைகளை முதல் கட்டமாக காட்சிப்படுத்தினர்.