தமிழின அழிப்புக்கு நீதி கோரும் ஊர்தி பவணி மன்னாரில்
Share

மன்னார் நிருபர்
(16.05.2023)
இலங்கை அரசாங்கத்தினால் 2009 ஆண்டு யுத்தம் என்ற போர்வையில் திட்டமிட்டு இடம் பெற்ற இனவழிப்புக்கு நீதி கோரும் ஊர்தி பவனி நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் மன்னார் நோக்கி மக்களின் அஞ்சலிக்காக வருகை தந்தது.
நேற்றைய தினம் மாங்குளம் ஊடாக வவுனியா முழுவதும் மக்களின் அஞ்சலிக்காக ஊர்வலமாக சென்று நேற்று இரவு மன்னார் பொது பேரூந்து நிலையத்தில் மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தியதுடன் மலர் தூவி வழிபாட்டிலும் ஈடுப்ட்டனர்.
குறித்த ஊர்தியானது மன்னாரை தொடர்ந்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்பாணம் மாவட்டம் முழுவதும் அஞ்சலிக்காக பயணம் செய்து 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.