மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற பெண்கள் மரபு சார் உணவு கொண்டாட்டம்
Share
27.05.2023
தமிழர் பாரம் பரிய உணவுகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முகமாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரெலியன் எய்ட் நிறுவனத்தின் நிதி ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரபு சார் உணவு கொண்டாட்டம் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் இன்று சனிக்கிழமை(27) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பெண்கள் குழுக்களை ஒன்றினைத்து அவர்கள் ஊடாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தி அதன் ஊடாக இயற்கையான முறையிலான உணவு தயாரிப்பை அதிகரிக்கும் முகமாக குறித்த நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் ,பெண்கள் ஒன்றிய செயற்பாட்டாளர்கள் கிழக்கு பல்கலைகழக விரிவிரையாளர்கள்,முஸ்லீம் மாதர் அபிவிருத்தி ஒன்றிய குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாதர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட 500 மேற்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் மாதர் ஒன்றிய இளைஞர் குழுவினரால் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.
அதே நேரம் மாதர் ஒன்றியத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தோட்ட செய்கையை சிறப்பாக மேற்கொண்ட பெண்களுக்கான ஊக்குவிப்பு பரீசில்களும் குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.