FRONTLINE COMMUNITY CENTRE சேவைகள் வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பான பணிகளைக் கௌரவித்து ஒன்றாரியோ அரசு வழங்கியுள்ள நிதி உதவி
Share
ஸ்காபுறோ நகரில் பல வருடங்களாக இயங்கிவரும் FRONTLINE COMMUNITY CENTRE இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவற்றால் பயன்பெறும் தமிழ் பேசும் மூத்தோரின் தேவைகள் கருதியும். ஒன்றாரியோ மாகாணஅரசு நிதி உதவி வழங்கியுள்ளது,
கடந்த வெள்ளிக்கிழமையன்று FRONTLINE COMMUNITY CENTRE நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றில் மேற்படி நிதி உதவி தொடர்பான அறிவித்தலை ஒன்றாரியோ மாகாண அமைச்சரும் மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ றேமண்ட் சோ அவர்கள் வெளியிட்டார்கள்.
அவ்வமயம். ஏனைய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் விஜேய் தணிகாசலம். மற்றும் அரிஸ் பாபிகியன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண அமைச்சரும் மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ றேமண்ட் சோ மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேய் தணிகாசலம். மற்றும் அரிஸ் பாபிகியன் ஆகியோரும் FRONTLINE COMMUNITY CENTRE நிறுவனத்தின் சேவையையும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி விஜய குலாவின் சேவை மனப்பான்மையையும் பாராட்டி உரையாற்றினார்கள்.
அங்கு கலந்து கொண்ட உதயன் பத்திரிகையின் பி;ரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் ‘யுகம்’ வானொலி அதிபர் கணபதி ரவீந்திரன் ஆகியோரையும் திருமதி விஜயா குலா தனது உரையின் போது பாராட்டி நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
படங்களும் செய்தியும் -சத்தியன்