LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண நூலக எரிப்பு: ஆண்டுகள் 42 ஆனாலும் நீங்கா நினைவுகள், ஆறாத வடுக்கள்…. சிறப்பு கானொளி

Share

தெற்காசியாவின் மிகச்சிறந்த நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 42 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

2003 ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட நூலகத்தினுள், 2023 ஜூன் மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை, நூலகத்தின் பிரதான நூலகர் ராகினி நடராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நூலகத்தை உருவாக்கியவர் மற்றும் நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்தவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ம. ஜெயசீலன், நூலக ஊழியர்கள், வாசகர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

1933ஆம் ஆண்டு தன்னுடைய புத்தகங்களையும், வீட்டையும் நன்கொடையாக அளித்து நூலகத்தைத் தொடங்கிய கே.எம்.செல்லப்பா, தெற்கிலிருந்து வந்த குண்டர்களின் தாக்குதலில் நூலகம் எரிந்து சாம்பலானதைக் கண்டு உயிரிழந்த புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியரும் மொழியியலாளருமான தாவீது அடிகளார் ஆகியோருக்கு அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

(Video Courtesy Lanka Files)