LOADING

Type to search

இலங்கை அரசியல்

பௌத்த மேலாதிக்கத்திற்கு நிதி அளித்து ‘வலுவூட்டும் ‘ வெளிச் சக்தி எது?

Share

வி.தேவராஜ்

மூத்த ஊடகவியலாளர்.

· தமிழ்த் தலைமைகளே’ மண்ணும் மக்களும் வேண்டாமா?

· தமிழ் மக்களை எங்கு அழைத்துச் செல்ல முற்படுகின்றீர்கள்?

· இலங்கை மக்களை ஓரணியில் அணி திரட்டலாம்!

நாடு கடன் சுமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றது. கடன் வழங்கிய நாடுகளிடம் கால அவகாசம் கேட்டு சாஷ;டாங்கமாக இலங்கை விழுந்து கிடக்கின்றது. குடிமக்கள் உணவுப் பற்றாக் குறையாலும் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த இயலாமலும் நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.மீட்பர் எவருமின்றி ஒட்டு மொத்த நாடு;ம் குறிப்பாக தென்னிலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

பெரும்பான்மையான மக்களுக்கு தேர்தல் மற்றும் அரசியல் அமைப்பு மீது நம்பிக்கை இல்லை – என்று இன்றைய அரசாங்கத்தின் இரு பெரும் தூண்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் நாட்டு மக்களுக்கு நாட்டை சீர் தூக்கிப் பார்க்கும் உண்மை விளம்பிகளாக ஆரூடம் கூறுகின்றனர்.

நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ‘2023ஃ2024 தேசிய சட்ட மாநாட்டில்’ உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

‘வருந்தத்தக்க வகையில்,நமது பெரும்பான்மையான மக்கள் தேர்தல் மற்றும் அரசியலில் நம்பிக்கை இழந்துவிட்டனர். அது பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகங்கள், தனியார் துறை தொழிற்சங்கங்கள் அல்லது தொழில் வல்லுநர்கள் என எதுவாக இருந்தாலும், ஏராளமான குடிமக்கள் நம்மை நிர்வகிக்கும் முழு அமைப்பின் மீதும் நம்பிக்கை இல்லை’ என்று ஜனாதிபதி கூறினார்.

· தேர்தலை நடத்தினால் மக்களின் நம்பிக்கை தெரியும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய அரசாங்கத்தில் பிரதம மந்திரியாக இருந்து விலகியவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கூற்றுப்படி மக்கள் தேர்தலில் நம்பிக்கை இழந்தார்களா என்பதற்கு தேர்தலை நடத்தினால் தெரியவரும்.ஏனெனில் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு ரணில் – ராஜபக்ஷ இன்றைய கூட்டரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இதற்கும் அப்பால் மக்கள் நம்பிக்கை இழப்பதற்கான பொறுப்பையும் சுதந்திர இலங்கையில் ஆட்சி பீடமேறியவர்களும் குறிப்பாக இன்றைய ரணில் – ராஜபக்ஷ ஆட்சியாளர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

· நீதி கோரி தமிழர் வழியில் தென்னிலங்கை!

இலங்கையின் அனைத்து அரச கட்டமைப்பிலும் அரசியல்வாதிகளிலும் நம்பிக்கை இழந்த நிலையில் நிற்கும் ஒட்டு மொத்த தென்னிலங்கையும் தமிழ் மக்களின் வழியில் சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கின்றது. மறுபுறம் சுதந்திர இலங்கையின் தோற்றுப் போன நாட்டை மீட்டெடுக்க தென்னிலங்கை சர்வதேசத்திடம் கையேந்தி நிற்கின்றது.

· இலங்கை மக்களை ஓரணியில் அணி திரட்டலாம்!

இலங்கை மக்களை ஓரணியில் அணி திரட்டுவதற்கான அனைத்து ஏது நிலைகளையும் கொண்டுள்ளது என்பது இலங்கையின் இன்றைய யதார்த்தமாகும் இன்றைய இந்த நிலையைப் பயன்படுத்தி தென்னிலங்கை வடக்குக் கிழக்கு மலையகம் முஸ்லிம் மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு எந்தத் தரப்பும் தயாராக இல்லை அல்லது அதற்கான சரியான திட்டத்தையும் தலைமையையும் வழங்கும் நிலையில் எவரும் இல்லை என்பதே உண்மையாகும்.

· ஆரசியல் கட்சிகளுக்கு அக்கறை இல்லை.

இது குறித்து களத்தில் நிற்கும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அது ஜே.பி.யாக வோ அல்லது சஜித் அணியினராகவோ அல்லது மொட்டுக்குள் இருந்து பிரிந்த அணியினராகவோ இருக்கலாம்.இவர்கள் எவருக்கும் இந்த விடயத்தில் அக்கறை இல்லை.

· 75வருட கால அரசியலின் பிள்ளைகள்.

தேர்தலில் பெரும்பான்மை இன வாக்குகளைக் குறி வைத்துக் காத்திருக்கும் இந்தக் கொக்குகளுக்கு இலங்கையின் பல்லின பல மொழி பல கலாசார பண்புகளுடனான அரசியல் கலாசாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பது குறித்துஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் இவர்களும் சுதந்திர இலங்கையின் 75வருட கால அரசியலின் பிள்ளைகளாகப் பிறப்பெடுத்தவர்கள் என்ற வகையில் இத்தகைய அரசியல் நகர்வை இவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாததுதான்.

எனவேதான் சுற்றிச் சுழன்று அதே 75வருடகால குண்டுச் சட்டி அரசியலுக்குள் குதிரை ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

· 2048 வரை உயிர் வாழ்ந்துவிட முடியுமா?

மொத்தத்தில் இலங்கையின் ஒட்டு மொத்த மக்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார மீட்சி குறித்த ஆரூடத்திற்கு மத்தியில் 2048 வரை உயிர் வாழ்ந்துவிட முடியுமா என்பது கேள்விக்குறியே.

ஆனால் இந்த பொருளாதார நெருக்கடியின் கூட்டு அவலத்தை நாடு சிறிது நேரத்தில் மறந்துவிடும் அளவுக்கு ரணில் – ராஜபக்ஷ ஆளும் தரப்பு அரசியல் காய்களை நகர்த்தி விட்டது.

தணிக்கை செய்யப்பட வேண்டிய வகையிலான வெறுப்புணர்வைக் கக்கிய முகமது சஹ்ரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இருந்து வெகு காலத்திற்கு முன் பின்வாங்கிய சட்ட அமலாக்க முகவர்களும் அரசியல் தலைவர்களும்இ தற்போது களத்தில்இறங்கியுள்ளனர் என தென்னிலங்கை ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

· ஜெரோம் பெர்னாண்டோ , நடாஷா விவகாரம்.

ஜெரோம் பெர்னாண்டோ, ‘மிராக்கிள் டோம்’ என்ற செல்வந்த தேவாலயத்தின் மத பிரசங்கத்தில் அவர் கூறிய கருத்துக்காக கைது செய்யப்படுவதை எதிர்கொள்கிறார்.

நடாஷா எதிரிசூரியா முட்டாள்களின் பிரைட் (மோடபிமானயா) நகைச்சுவை நிகழ்ச்சியில் தனது நடிப்பின் மூலம் மத ஒற்றுமையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

· பொது மக்களின் எச்சரிக்கை.

குடிமக்கள் உணவு மற்றும் நல்ல வாழ்க்கையின் பற்றாக்குறையால் அவதிப்படும்போதுஇ அவர்களின் கவனத்தை ஜெரோமி மற்றும் நடாஷாவிடம் திருப்புவது மக்கள் தமது பசியை மறந்து அன்றாடம் அவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புவதற்கான உபாயமாகவே மேற் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான வழியில்இலங்கை அதிகாரிகள் ஒரு சிலரின் மதவாதத்தை ஊர்ஜிதம் செய்யக்கூடாது. அத்தகைய சூழ்ச்சிகள் நாட்டைக் கொண்டு செல்லும் இலக்கு மிகவும் பரிதாபகரமானதாக இருக்கும் மற்றும் வாழத் தகுதியற்றதாக இருக்கும் என்றும் பொது மக்கள் எச்சரிக்கின்றனர்.

தென்னிலங்கையில் பொது மக்களின் எச்சரிக்கை அரசாங்கத்தை நோக்கி வெளிவரும் அதேவேளையில் இனவிவகாரத்துக்கான தீர்வு குறித்து பேசி வரும் ஜனாதிபதி ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் வடக்குக் கிழக்கில் தலைவிரித்தாடும் பௌத்த மேலாதிக்கத்தின் செயற்பாடுகள் குறித்து மௌனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வி எழும்புகின்றது. இந்த நகர்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளை கொதி நிலையில் வைத்திருப்பதே இலக்காக இருக்கின்றது.

அதே வேளையில் ஒட்டு மொத்த நாடும் வங்குரோத்து நிலையில் உள்ளது.கடன் சுமையில் இருந்து விடுபடும் மார்க்கம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. அனால் இத்தகைய பொருளாதார நெருக்கடிகளையும் மேவிய நிலையில் பௌத்த மேலாதிக்க கரங்கள் தமிழர்களின் தாயகப் பகுதிகளை விழுங்கிவிட முனைப்புடன் செயற்படுகின்றது. இவை நாட்டின் நல்லிணக்கத்திதிற்கு பேருதவி புரிபவையா? என தமிழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதனைத் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி தமிழ்த் தலைமைகளிடம் உள்ளதா?

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தின் மீதான பௌத்த மேலாதிக்கம் காணி அபகரிப்பு சிங்களக் குடியேற்றம் என்பன துரித கதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அந்த நிகழ்ச்சி நிரல் வீரியம் பெறுவதற்குள்ளேயே அரகலய அவரை வெளியேற்றி விட்டது.

அதற்காக பௌத்த மேலலாதிக்க செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன என்று அர்த்தமல்ல. ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதைத் தொடர்ந்து அது மீண்டும் வீரியம் பெற்றது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தபோதும் பௌத்த மேலாதிக்கத்தின் அனைத்துநிகழ்ச்சிநிரல்களும்மிகவேகமாகமுன்னெடுக்கப்படுகின்றன.பொருளாதார நெருக்கடிகளையும் மீறி பௌத்த மேலாதிக்க நிகழ்ச்சி நிரல்களுக்கு பணம் கொட்டுவதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.

தொல்பொருள் திணைக்களது;திற்கு கிடைக்கும் நிதி பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பிய போது பௌத்த துறவிகள் நிதி அளிப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பௌத்த துறவிகளுக்கு எங்கிருந்து பெருந் தொகையான நிதி கிடைக்கின்றது? இந்த நிகழ்ச்சி நிரலின் பின்னால் நிற்கும் நாடு எது என்பது குறித்து தமிழர் தரப்பு ஆராய்ந்து பார்த்து வெளிக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.உண்மையில் இந்த மறைந்த கரம் குறித்து ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களும் தேடிப் பார்க்க வேண்டிய விடயமாகும்.

தமிழ்த் தலைமைகளைப் பொருத்து இன விவகாரத் தீர்வு குறித்து எந்த விதமான திட்டவட்டமான தீர்வும் இன்றி காலத்துக்குக் காலம் பேச்சிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். தமிழர் தாயகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தியோ அல்லது இலங்கை அரசாங்கம் பெரும் எடுப்பில் மேற் கொள்கின்ற காணி கபளீகாரரம் குடியேற்றம் என்பனவற்றையும் தடுத்து நிறுத்தும் வகையிலான வேலைத் திட்டங்கள் ஏதும் இன்றி இருப்பதுடன் இவை அனைத்தையும் தமிழ் ஊடகங்களில் பரபரப்புக்கான செய்திகளாக்கி குளிர் காயும் அரசியலே மேற் கொள்ளப்படுகின்றது.

· தமிழ் மக்களின் கேள்வி?

இதே பாணியில் தமிழ்த் தலைமைகள்; தமிழ் மக்களை எங்கு அழைத்துச் செல்ல முற்படுகின்றனர் என்பதுதான் தமிழ் மக்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து எழும்பும் கேள்வியாகும்.

இத்தகைய வெற்று வேட்டு அரசியல் தொடருமாயின் இன்று இணக்க அரசியலில் வெளிப்படையாக ஈடுபடும் ‘தமிழ்த் தலைமைகளும்’ மறைமுக இணக்க அரசியலில் ஈடுபடும் ‘தமிழ்த் தலைமைகளும்’ சாதிக்க நினைப்பது என்ன? என்ற கேள்விகளுக்கப்பால் இந்த இரு பகுதியினருமே அரசியல் நடத்துவதற்கு மண் இருக்காது. தமிழ் மக்களுடன் கலந்து விட்ட சிங்கள மக்களும் சிதறடிக்கப்பட்ட தாயகத்தில் நீங்கள் நடத்துவதற்கு அரசியலும் இருக்காது.

ஏனெனில் மக்களும் மண்ணும் பேரினவாத அலைக்குள் மூழ்கிக் கிடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

எனவே ‘தமிழ்த் தலைமைகளே’ எதிர் காலத்தில் யாருக்காக அரசியல் நடத்துவீர்கள?;. எவ்வாறு நாடாளு மன்றத்தை ,மாகாண சபைகளைக் கட்டி ஆளப் போகின்றீர்கள்.

Email :vathevaraj@gmail.com

6th June 2023.