LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் தள்ளாடியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது பொசன் நிகழ்வு

Share

மன்னார் நிருபர்

(04-06-2023)

பொசன் பண்டிகையை முன்னிட்டு மன்னார் தள்ளாடி சந்தியில் மன்னார் தள்ளாடி இராணுவ தளபதியின் வழிகாட்டல் மற்றும் பூரண மேற்பார்வையின் கீழ் இராணுவ பொசன் வலயம் நேற்றைய தினம் (4) பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது.

மன்னார் மாவட்டத்தில் வாழும் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தினால் இந்த பொசன் வலயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர்,பாதுகாப்பு திணைக்கள தலைவர்கள், சர்வமத தலைவர்கள், பொது மக்கள் என 4000 இற்கும் அதிகமானோர் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்துள்ளனர்.

மூன்று நாட்கள் நடத்த ஏற்பாடுகள் செய்த இந்த பொசோன் பிரதேசத்தில் அழகிய தோரண ராஜா, மிஹிந்தலா பிரதி போன்ற பல அழகிய விளக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பக்தி பாடல் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

இந்த பொசன் நிகழ்வு அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்ததுடன் அனைத்து அம்சங்களையும் தமிழில் விளக்கியமை அப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்த பொசன் பிரதேசத்தை ஒழுங்கு படுத்துவது தொடர்பில் இலங்கை இராணுவம் பிரதேசத்தின் அனைத்து உயர் அரச அதிகாரிகள் மற்றும் சமயத் தலைவர்களின் அங்கீகாரத்தைப் பெற்று அப்பிரதேசத்தின் மத நல்லிணக்கத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் பெரும் உதவியாக இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.