LOADING

Type to search

கனடா அரசியல்

எனக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைப் பெறுகின்ற தகைமை பெறுவதற்கு காரணமாக விளங்கிய நூலை எழுத நான் 16வருடங்களை ஒரு தவமாக ஏற்று வெற்றியைத் தழுவியுள்ளேன்

Share

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய விருதினைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் சிவசங்கரியின் உருக்கமான உரை

“உலகத் தமிழ் படைப்பாளிகளின் கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் திகழும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைப் பெறுகின்ற தகைமையை நான் பெறுவதற்கு காரணமாக விளங்கிய ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் நூலை எழுத நான் 16வருடங்களை ஒரு தவமாக எடுத்துக் கொண்டு எழுத்துப் பணியை மேற்கொண்டதால் இன்று வெற்றியைத் தழுவிய ஒருத்தியாக உங்கள் முன்னாள் நிற்கின்றேன். அந்த அங்கீகாரத்தை வழங்கிய கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘ அமைப்பின் நிறுவனரும் உலகறிந்த எழுத்தாளருமான ” அ. முத்துலிங்கம் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”

இவ்வாறு கடந்த 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்து த எஸ்டேட் விழா மண்டபத்தில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத் தோட்ட’த்தின் 2022 இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் மேற்படி ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் நூலை எழுதியமைக்காக ‘இந்திய இலக்கிய தரிசன விருது’ என்னும் உயரிய கௌரவத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றியபோது உருக்கத்துடன் தெரிவித்தார் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள்.

‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘ அமைப்பின் தலைவர் மனுவல் ஜேசுதாசன் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவின் பிரதம விருந்தினராக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் பன்முகத் திறன் கொண்டவரும் என்னும் ஆங்கில நூலின் ஆசிரியருமான அவர்களும் சிறப்பு விருந்தினராக விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர் அவர்களும் அழைக்கப்பெற்றிருந்தார்கள்.

அவர்களது மிகச் சிறந்த உரைகளும் ஆங்கிலத்தில் இடம்பெற்றன.

2022 ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகளைப் பெற்று கொண்ட வெற்றியாளர்களின் விபரங்கள் பின்வருமாறு அமைகின்றன.

தமிழக எழுத்தாளர் பாவண்ணன் மற்றும் அவுஸ்ரேலியா வாழ் எழுத்தாளர் லெ.முருகபூபதி ஆகியோருக்கு இயல்விருதுகள் வழங்கப்பெற்றன.

சிறந்த புனைவு எழுத்தாளருக்கான விருது வேல்முருகன் இளங்கோ அவர்களுக்கும் அபுனைவு எழுத்தாளருக்கான விருது சாம்ராஜ் அவர்களுக்கும் ‘இந்திய இலக்கிய தரிசன விருது’ எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கும் கவிதைக்கான விருது சுகிர்தராணி அவர்களுக்கும். இலக்கியச் சாதனைக்கான விசேட விருது கனடா வாழ் வி. என். கிரிதரனுக்கும் வழங்கப்பெற்றன.

இந்த விருதுகள் வழங்கும் வழங்கும் விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் நிறுவனர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் இயக்குனர் சபை உறுப்பினர்களுக்கும் ‘கனடா உதயன்’ தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது.