LOADING

Type to search

கதிரோட்டடம்

அரச பயங்கரவாதத்தின் துப்பாக்கிகளுக்கு இரையான தந்தையின் தனயன் அதே துப்பாக்கிகளுக்கு முன்பாக நெஞ்சைக் காட்டியது குற்றமாம்!

Share

09-06-2023

கதிரோட்டம்

(பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது வடக்கின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைத் தவிர்த்து) தமது பதவியை இராஜினாமாச் செய்து, நீதி கேட்டு, இதய சுத்தியோடு போராட்டத்தை நடத்தும் அரசியல் அத்தியாயம் உடனடியாக எழுதப்பட வேண்டும் )

‘பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காலையில் கைது. மாலையில் விடுதலை’ என்ற எமது யாழ்ப்பாணச் செய்தியாளரின் செய்தி. கஜேந்திரகுமாரைக் கைது செய்தமைபோன்று, இனிமேல் சாதாரண பொது மக்களுக்கும் நடக்கும் என்ற எச்சரிக்கையின் ஆரம்பம்’ என்று அர்த்தப்பட எழுதியுள்ள நிலாந்தனின் கட்டுரை. போன்ற பல செய்திகளும் கட்டுரைகளும் இவ்வாரப் பதிப்பின் உள்ளே பக்கங்களில் காணப்படுகின்றன.

அன்று அரச பயங்கரவாதத்தின் துப்பாக்கிகளுக்கு இரையான தந்தையான குமார் பொன்னம்பலம் அவர்களின் தனயனான கஜேந்திரகுமார் பொன்னம் பலம் அவர்கள். இன்று அதே துப்பாக்கிகளுக்கு முன்பாக நெஞ்சைக் காட்டி நின்று நீதி கேட்டது தென்னிலங்கையைத் தாக்கியுள்ளது. அதன் விளைவாக இடம்பெற்ற சம்பங்களும் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்படுவதுமாக இந்த வாரம் அச்சத்தின் மத்தியிலும் சற்றுத் துணிச்சலுடனும் நகர்ந்து செல்கின்றது.

அரசாங்கத்தின் மக்களாக விளங்கும் நாட்டு மக்களில் இனங்களின் அடிப்படையில் காவல்துறையினர் பணியாற்றுவதும் அதுவும் யுத்தத்தின் பாதிப்புக்களிலிருந்தும் அரசாங்கத்தின் அடக்கு முறையிலிருந்து முற்றாக வெளியேறு முடியாத பாதிப்புக்களுடன் தங்கள் தாயக மண்ணில் வாழும் தமிழர்களுக்கு தொடர்ந்து தொந்தர செய்யவும். தட்டிக் கேட்டால் துப்பாக்கியை நீட்டுவது போன்ற சம்பவங்கள் நமது மண்ணில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை தட்டிக் கேட்பதற்கு ஆட்கள் இல்லாததால் மக்கள் என்னும் ‘ஆட்டுக்குட்டிகள்’ அரசபயங்கரவ hதத்திற்கு இனியும் இரையாகிப் போய்விடக்கூடாது என்பதில் அக்கறை கொள்ளும் அரசியல் மற்;றும் சமூகத் தலைவர்கள் எமக்கு உடனடியாகத் தேவை.

குமார் பொன்னம்பலம். ரவிராஜ் போன்றவர்களின் வரிசையில் அடுத்த ஒரு சம்பவம் நிகழ்ந்தால் எமது மக்களும் தலைவர்களும் என்ன செய்யலாம் என்பதை இப்போதே முடிவெடுத்துக் கொள்ளவேண்டும். அதற்கு முதற்படியாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது வடக்கின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைத் தவிர்த்து) தமது பதவியை இராஜினாமாச் செய்து நீதி கேட்டு இதய சுத்தியோடு போராட்டத்தை நடத்தும் அரசி-யல் அத்தியாயம் உடனடியாக எழுதப்பட வேண்டும் என்பதே எமது இவ்வாரத்தின் கதிரோட்டத்தின் வாயிலா விடுக்கும் நியாயமான வேண்டுகோள் ஆகும்.