LOADING

Type to search

இலங்கை அரசியல்

எமது மக்கள் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் – யாருக்கும் சேவகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை

Share

மன்னாரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

மன்னார் நிருபர்

(19-06-2023)

உலகத்திலே ஈழத்தமிழர்களின் இழப்பு என்பது சொல்லில் அடங்காது.இந்த மண்ணில் பாரிய ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்துள்ளது.லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பரிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் எமது மக்களின் உரிமைகள் வெற்றி பெற வேண்டும். இந்த மண்ணில் யாரும் கேள்வி கேட்க முடியாத நிலையில்,நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

33 வது தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மன்னாரில் உள்ள ஈ.பி.ஆப்.எல்.எப் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம்பெற்றது.

-இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் ,உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

ஈ.பி.ஆர்.எல்.எப்,ரெலோ,புளொட்,தமிழ் தேசிய கட்சி,ஜனநாயக கட்சி ஆகிய 5 கட்சிகளும் ஒன்று கூடி நாங்கள் அனைவரும் திடமான ஒரு பாதையில் செல்வதற்கு ஒரு யாப்பை தயார் செய்து அனைவரும் அதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

முன்னர் தமிழரசு கட்சி இருந்த போது நாங்கள் ஒரு யாப்பை தயாரிக்க முடியாது என்று சொன்னார்கள்.இன்று குறித்த 5 கட்சிகளுக்கும் ஒரு நிர்வாகத்தையும் தெரிவு செய்துள்ளோம்.

கட்சிக்கான செயலாளர்,பேச்சாளர்,குறித்த கட்சிக்கான தேசிய அமைப்பாளரை நியமித்துள்ளோம்.இவ்வாறு பல்வேறு தெரிவுகளை மேற்கொண்டு ஒரு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளோம்.எமது முக்கிய நோக்கம் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது.

மேலும் ஒரு கோரிக்கையையும் நாங்கள் முன் வைத்துள்ளோம். எதிர் காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் பேசுவதாக இருந்தால் நாங்கள் முன் நின்று முயற்சி செய்து தமிழரசுக்கட்சி,சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களையும் அழைத்து நாங்கள் அனைவரும் இணைந்து ஒரே குரலில் பேச வேண்டும் என நாங்கள் அந்த முயற்சிகளை முன்னெடுப்பதாக வும் முடிவுகளை எடுத்துள்ளோம்.

நாங்கள் ஏனையவர்களுக்கு முன் மாதிரியாக செயல்பட வேண்டும்.எவ்வளவு இழப்புக்களை சந்தித்துள்ளோம்.

சுமார் 45 வருட கால போராட்டம்.யுத்தம்.,உலகத்திலே ஈழத்தமிழர்களின் இழப்பு என்பது சொல்லில் அடங்காது.இந்த மண்ணில் பாரிய ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்துள்ளது.லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பரிக்கப்பட்டுள்ளது.அந்த நிலையில் எமது மக்களின் உரிமைகள் வெற்றி பெற வேண்டும்.

இந்த மண்ணில் யாரும் கேள்வி கேட்க முடியாத நிலையில்,நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.எங்களுக்காக இருக்கக்கூடிய இப்போது அரசியல் சாசனத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம். 13 ஆவது திருத்தச் சட்டம் என்றால் என்ன?மாகாணங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

முழுமையாக இல்லை.ஆனால் இருக்கக்கூடிய அதிகாரங்களை எங்களுக்கு தாருங்கள்.எங்களுக்கு அதிகாரம் வழங்கினால் எங்களுக்கான ஒரு பொலிசை உருவாக்குவோம்.மாகாணத்தை கேட்காது காணிகளை யாருக்கும் வழங்க முடியாது என்ற நிலை உள்ளது.

எனவே குறைந்த பட்சம் அந்த அதிகாரங்களை யாவது எங்களுக்கு தாருங்கள்.ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையை நாங்கள் உருவாக்கினோம்.வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் தலைநகராக திருகோணமலையை தெரிவு செய்திருந்தோம்.

ஆனால் 18 வருடங்களுக்கு பிற்பாடு மஹிந்த ராஜபக்ஷ,ஜே.வி.பி போன்றவர்கள் நீதிமன்றம் சென்று வடக்கு கிழக்கு இணைப்பை இல்லாது செய்து வடக்கு, கிழக்கை வேறு வேறாக ஆக்கினார்கள்.கிழக்கு மண்ணும் பாதுகாக்கப்பட வேண்டும்.தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக வழக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற தேவைப்பாடு காணப்பட்டது.

இன்று ஜனாதிபதியாக உள்ளவருக்கு பாராளுமன்றத்தில் பின் பலம் கிடையாது.அவர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்.அவருக்கு பாராளுமன்றத்தில் பொது ஜன பெரமுன வின் ஆதரவு மட்டுமே அவருக்கு உள்ளது.அவரால் புதிய விடையங்களை கொண்டு வர முடியாது.நாங்கள் அவரிடம் கேட்பது 13 ஆவது திருத்தம் ஏற்கனவே அரசியல் சாசனத்தில் இருக்கிறது.

அது ஒரு சட்டமாக உள்ளது.அதை நீங்கள் நிறைவேற்றுங்கள்.அதை நிறைவேற்றுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது.ஒட்டு மொத்தமான சிங்கள தரப்பு அதை நிறைவேற்ற பிரச்சினை இல்லை என்று சொல்லுகின்ற போதும் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை.

நாங்கள் மாத்திரம் இல்லாது தமிழரசுக் கட்சியுடனும்,சி.வி.விக்னேஸ்வரனுடன் கதைத்து அவர்களையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றோம்.அவ்வாறான ஒரு செயல்பாட்டை செய்யவும் விரும்புகின்றோம்.

நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டால் மாத்திரமே இந்த விடையங்களில் வெற்றி கொள்ள முடியும் என்பது காலத்தின் தேவையாக உள்ளது.

எமது மக்கள் இந்த மண்ணில் கௌரவமாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.யாருக்கும் கை கட்டி சேவகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.எமக்கு சுமார் 15 லட்சம் புலம்பெயர் உறவுகள் எமக்கு ஆதரவாக உள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.