LOADING

Type to search

கனடா அரசியல்

எல்லோர்க்கும் இனிவராய் வாழ்ந்து நிரந்தரமாய் எமைப் பிரிந்த சாந்திநாதன்

Share

(கனடாவில் நீண்ட காலம் வாழ்ந்து பல்வேறு துறைகளில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டோடும் உழைத்து. நண்பர்களைச் சம்பாதித்து குடும்பத்தைக் கட்டிக் காத்து அண்மையில் காலமான திரு நாகமுத்து சாந்திநாதன் அவர்களது இறுதிக்கிரியை நிகழ்வில் அவரது நண்பர் டாக்டர் கதிர் துரைசிங்கம் ஆற்றிய இரங்கலுரை)

எல்லோற்கும் நண்பனாகவும் , எல்லோற்கும் இனியவராகவும்,  எல்லோற்கும் உதவுபவராகவும்,
எல்லோற்கும் பொதுவாவனராகவும் எல்லோரின் மதிப்பிற்கு உரியவராகவும் எம் மத்தியில் வாழ்ந்தவர் திரு நாகமுத்து சாந்திநாதன் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து
அவர்களுக்கு மதிப்பளித்துப் பாடறிந்து ஒழுகும் சாந்திநாதனை அனைவரும் நேசிக்கிறார்கள்
சொந்தம் கொண்டாடுகிறார்கள் அழைத்த விழாக்களுக்கு குறித்த நேரத்திற்கு தவறாது செல்லும் சாந்தி விழா முடிந்த பி்ன்அதன் அமைப்பாளரையும் கலைஞர்களையும் பாராட்ட தவறமாட்டார் திருத்தங்கள் இருப்பின் நாசூக்காக அவர்களுக்கு எடுத்துக் கூறவும் தயங்கமாட்டார்.

நேர்மை ,நேர்த்தி் , நேரம் தவறாமை சாந்தியின் தாரக மந்திரம். பொறியியல் துறை சார்ந்த சாந்தி Planning இன்றி எதுவும் தொடங்க மாட்டார். நாடக இயக்குனராக  சிறந்து விளங்கிய
சாந்தி 25 ஆண்டுகளாக மகாஜனக் கல்லூரி முத்தமிழ் விழாக்களின் சூத்திரதாரியாக செயற்பட்டதொடு பரீட்சைக் குழுவின் பொறுப்பேற்று திறம்பட நடத்தியவர்  சாந்திநாதன் இரண்டு ஆண்டு தலைவராக பணிபுரிந்து பின்னர் காப்பாளராக சங்கத்தை வழிநடந்தியவர்
அரங்காடலின் ”ஆக்குவாய் காப்பாய் “நாடகத்தில் என்னை ஒரு வைத்திய நிபுணராக
நடிக்க செய்து அதை ஐந்து மேடை ஏற்றி, பலர் பாராட்டைப் பெற வைத்த இயக்குனர் சாந்தி என்னை அண்ணை என்றே அழைப்பார்.

2012 இல் உஷா சாந்தி உடன் மனைவியும் நானும் விடுமுறைக்கு ஶ்ரீலங்கா சென்றபோது சாந்தியின் திட்டமிடலின் திறனையும் அதன் பலனையும் அனுபவித்தேன் எந்த விழாவாயினும் என்னைக்கூட்டிச் செல்பவர் சாந்திதான்- ஐந்து மணி என்றால் 4.59 க்கு சாந்தியின்
Car driveway யில் நிற்கும். -விழா நிகழ்வுகளை விட வாகனத்தில் சாந்தியின் விமரசனமும் சம்பாஷனையும் சுவாரசியமாக இருக்கும் சாந்தியின் நடை உடை நாடகம் இரசனை
உரையாடல் ஹாசியம் விமர்சனம் அனைத்துமே தனித்துவமானவை.

June 10 சாந்தியுடன் இருந்த நான் மதியம் 12 15 அளவில் விடை பெறுகிறேன் என்று கை அசைத்தேன் நானும் விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. எல்லாம் plan படி நடக்குது என்று உணர்ந்த சாந்தி Thumbs up காட்டிய போது நட்பின் வலிமையையும், வலியையும் உணர்ந்தேன்.
போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆன சாந்திநாதனின் ஆன்மா -மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமல் – சிவன்அருளால் சிவன் தாள் சேர வணங்குவோம்
.