கனடா- பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள ஶ்ரீ புவனேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தின் மஞ்சத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
Share
சிவஶ்ரீ பாஸ்கரன் குருக்கள் அவர்களை பிரதம குருவாகக் கொண்டு இயங்கிவரும் கனடா- பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள ஶ்ரீ புவனேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் சனிக்கிழமை 8ம் திகதி இரதோற்சவம் நடைபெறவுள்ளது என ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ பாஸ்கரன் குருக்கள் அவர்கள் அறியத் தந்துள்ளார்கள்.
ஆலயத்திதன் மஞ்சத் திருவிழா கடந்த 30ம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி மஞ்சத்திருவிழாவின் பிரதான உபயகாரராக பிரம்ரன் வாழ் தொழிலதிபர் கணேஸ்வரன் குடும்பத்தினர் விளங்கினார்கள்.
அன்றைய தினம் அடியார்கள் பலர் ஆலயத்திற்கு வந்து மஞ்சத்திருவிழாவை கண்டு களிக்கும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
விசேட பூசைகள் மற்றும் அபிசேகங்கள் இடம்பெற்ற பின்னர் வசந்த மண்டபப் பூசைகளும் இடம்பெற்று அம்பாள் மஞ்சத்தின் மீதேறி வீதி வலம் வருவதற்கு தயாரானார்.
லயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ பாஸ்கரன் குருக்கள் மற்றும் ஜேர்மனியிலிருந்து சிறப்பு அழைப்பின் நிமித்தம் வருகை தந்திருந்த மகேஸ்வரக் குருக்கள் அவர்களும் இணைந்து அனைத்து அபிசேகங்கள் மற்றும் பூசைகள் ஆகியவற்றைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மங்கள வாத்தியம் ஒலிக்க அம்பாள் மஞ்சத்தின் மீதேறி வீதி வலம் வந்த காட்சி அற்புதமாக விளங்கியது.
அங்கு கலந்து கொண்ட உதயன் லோகேந்திரலிங்கம் மற்றும் கணக்காய்வாளர் இலங்கேஸ் ஆகியோருக்கும் பிரதான உபயகாரராக தொழிலதிபர் கணேஸ்வரன் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் சிறப்பு கௌரவம் வழங்கப்பெற்றது.