வடக்கு கிழக்கில் எமது மக்கள் கௌரவமாக வாழ்ந்த இடங்களை நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் . உறுதியாக உள்ளோம் என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
Share
வடக்கு கிழக்கில் எமது மக்கள் கௌரவமாக வாழ்ந்த இடங்களை நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் . உறுதியாக உள்ளோம்ன. அத்துடன் எமது மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை பெற வேண்டும் என்றால் பேச்சுவார்த்தைக்கு போவதை தவிர எங்களுடைய கைகளில் வேறு ஆயுதங்கள் இல்லை. எனவே பேச்சுவார்த்தைககளும் நாங்கள் பாராளுமன்றத்தில் செய்யும் வாதங்களுமே எம்மிடம் உள்ள ஆயுதங்கள். இதை அனைவரும் உணர வேண்டும்”
இவ்வாறு தெரிவித்தார் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,அரசியல் தீர்வுக்காக ஏங்கி கொண்டிருக்கும் எமக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன.முதலாவது இந்த நாட்டில் எமது மக்களுக்கு எந்த உரிமையும் தேவை இல்லை. சிங்கள மக்கள் சொல்வதையே நாங்கள் கேட்டுக்கொண்டு வாழ வேண்டும் என்று வாதம் செய்கின்றவர்களோடு நாமும் வாதம் செய்ய வேண்டும். மேலும் பெரும்பான்மை இனத்தவர்கள் நீங்கள் நினைத்தபடி விகாரை அமையுங்கள். தமிழர்களின் காணிகளை அபகரித்து, யாரை வேண்டுமானாலும் குடியேற்றுங்கள். நாங்கள் தெற்கில் வாழும் தமிழர்கள் போன்று சிறுபான்மையாக வாழ்கின்றோம் என்று எது நடந்தாலும் ஏற்றுக்கொள்வது.முடியாது
தொடர்ச்சியாக எமது பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் நாம் பேசிக்கொணடே இருப்போம் என்றார் சாணக்கியன் எம். பி